ஸ்டார்க் எனக்கும் நடுவுல இதான் நடந்தது.. பும்ரா விராட் பாய் சொன்னததான் செஞ்சேன் – ஹர்ஷித் ராணா பேட்டி

0
1169
Harshit

இந்திய அணியின் இளம் வீரர் ஹர்சித் ராணா களத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க் உடன் என்ன மாதிரி பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறித்து கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் அறிமுகமானார்கள். இருவருக்குமே தங்களுடைய சர்வதேச டெஸ்ட் அறிமுகம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

அட்டகாசமாக துவங்கிய ஹர்ஷித் ராணா

இந்திய அணியின் பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷித் ராணா மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிகக்குறிப்பாக அபாயகரமான வீரரான டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றி இந்திய அணிக்கு பெரிய முன்னேற்றத்தை கொடுத்தார்.

மேலும் இன்றைய நாளில் மிட்சல் ஸ்டார்க் உடன் அவருக்கு களத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவர் வீசிய ஒரு பந்து ஸ்டார்க் ஹெல்மெட்டை தாக்கியது. மேலும் ஸ்டார்க் ஹர்ஷித் ராணாவிடம் “நான் உன்னை விட வேகமாக பந்து வீசுவேன். எனக்கு அது சம்பந்தமாக நிறைய அனுபவம் இருக்கிறது” என்று களத்தில் பேசியிருந்தார்.

- Advertisement -

பும்ரா விராட் பாய் சொன்னார்கள்

இதுகுறித்து பேசி இருக்கும் ஹர்ஷித் ராணா கூறும்பொழுது “எங்களுக்குள் மிக அதிக பேச்சுவார்த்தை களத்தில் எதுவும் நடக்கவில்லை. நானும் ஸ்டார்க்கும் மிகவும் நல்ல நண்பர்கள். நாங்கள் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு இந்த வருடம் ஒன்றாக சேர்ந்து விளையாடி இருக்கிறோம். எனவே எங்களுக்குள் நல்ல பிணைப்பு இருக்கிறது. அதிக வார்த்தை பரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை. இது களத்தில் வழக்கமான ஒன்றுதான்”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கிரிக்கெட் உலகை காலடியில வச்சிருக்காரு.. எங்கள மாதிரி கிடையாது – கவாஸ்கர் பாராட்டு

“நான் களத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன பும்ரா பாய் எனக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். மேலும் விராட் பாயும் எனக்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டே இருந்தார். இது எனக்கு மிகவும் உதவியோடு வித்தியாசமான நம்பிக்கையை கொடுத்தது. இன்று காலை ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயித்து விளையாடவில்லை. தொடர்ந்து நாங்கள் பேட்டிங் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -