இந்த புதிய விதி விராட் கோலிக்கு மன அழுத்தத்தையே உண்டாக்கும் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

0
246

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அதில் குறிப்பாக ஒரு விதி விராட் கோலியை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாட் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ விதித்த புதிய விதிமுறை

இந்திய கிரிக்கெட் அணி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவிர நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என இந்திய அணி வரிசையான தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து ஆராய்ந்த பிசிசிஐ வீரர்களுக்கு இருந்த சில தளர்வுகளை நீக்கியது.

அதில் ஒரு விதியான வீரர்களின் குடும்பம் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவர்களோடு தங்கக்கூடாது என விதிமுறையை விதித்தது. இந்த விதியானது பல முன்னாள் வீரர்களிடையே சற்று கேள்விகளை எழுப்பி இருக்கிறது. வீரர்களின் குடும்பம் அருகில் இருந்தால் அவர்களது செயல் திறனையே அதிகரிக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் குடும்பம் வீரர்களோடு தங்கக் கூடாது என்னும் விதிமுறை விராட் கோலிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” விராட் கோலிக்கு இப்போது குடும்பம் எனும் அமைப்பு உள்ளது. அவர் உண்மையில் உலகம் எங்கிலும் மூன்று வடிவங்களில் ஆதிக்கம் செலுத்திய போது இல்லாத வேறு சில கடமைகள் அவருக்கு இப்போது மைதானத்திற்கு வெளியே இருக்கின்றன. எனவே இது கிரிக்கெட் பற்றியது மட்டுமல்லாமல் மைதானத்திற்கு வெளியே நடக்கக்கூடிய விஷயங்கள் பற்றியதுதான். விராட் கோலிக்கு மைதானத்தை விட மைதானத்திற்கு வெளியே நடக்கக்கூடிய நாடகம் இதுதான் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:இதுதான் என்னோட முதல் போட்டி.. அவங்க வர்றதால ரொம்ப வித்தியாசமான உணர்வா இருக்கு – வருண் சக்கரவர்த்தி பேட்டி

அங்கு அவர் தனது திறமையை அதிகமாக பயன்படுத்திக் கொண்டதால் தான் சிறப்பாக செயல்பட முடியாமல் போய்விட்டது. குடும்பங்கள் தொடர்பாக பிசிசிஐ கொண்டு வந்துள்ள புதிய விதிமுறை விராட் கோலிக்கு இன்னும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதில் சமநிலை கொள்ள வேண்டியது அவசியம். வீரர்கள் தங்கள் குடும்பத்தை முடிந்த வரையில் அழைத்துச் செல்வது முடியும். இந்தியாவில் கிரிக்கெட் அளவு மற்றும் பயணத்தின் அடிப்படையில் இது சாத்தியமாகும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -