இதுதான் என்னோட முதல் போட்டி.. அவங்க வர்றதால ரொம்ப வித்தியாசமான உணர்வா இருக்கு – வருண் சக்கரவர்த்தி பேட்டி

0
288

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சென்னையில் நடைபெறும் போட்டிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் பெற்றோர்கள் வருவதாக மிகவும் உற்சாகமாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி20

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியை வெற்றி பெற்றது. இதில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பட்லர், ஹாரி புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரது விக்கெட்டுகள் இங்கிலாந்து அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்த காரணமாக அமைந்தன. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் தனது சொந்த மாநிலமான சென்னையில் நடைபெற உள்ள நிலையில் வருண் சக்கரவர்த்தி இரண்டாவது போட்டி குறித்து சில உற்சாகமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்திய அணிக்காக தனது முதல் போட்டி சொந்த மைதானத்தில் விளையாட உள்ள நிலையில் இதுகுறித்து ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மன உறுதியோடு உற்சாகமாக இருக்கிறேன்

இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி விரிவாக கூறும்போது “நாங்கள் அடுத்த போட்டி விளையாடுவதற்காக சென்னைக்கு செல்கிறோம். சென்னையில் இந்தியாவுக்காக எனது முதல் போட்டி இதுவாக இருக்கும். என் குடும்பத்தினர் வருவார்கள் மற்றும் என் பெற்றோர்கள் நான் விளையாடுவதை பார்க்க வருவார்கள் என்பதால் மிகவும் உற்சாகமாக ஆர்வமுடன் இருக்கிறேன். இந்த அனுபவம் எனக்கு நன்றாக இருக்கிறது. நாட்டிற்காக சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டி எனக்கு இதுவாகும்.

இதையும் படிங்க:

இது நிச்சயமாக எனக்கு ஒரு உறுதியான மன நிறைவை தருவதால் இந்த உணர்வு எனக்கு மிக நன்றாக உள்ளது” என்று வருண் சக்கரவர்த்தி கூறியிருக்கிறார். வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே இந்திய அணிக்காக விராட் கோலி தலைமையிலான டி20 உலக கோப்பையில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சரியாக செயல்படாத காரணத்தினால் அணியில் இருந்த நீக்கப்பட்டவர் அதற்கு பிறகு தனது கடின உழைப்பின் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -