இந்திய கிரிக்கெட் அணி வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் பாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணியினர் முன்னதாகவே சென்று தங்களது பயிற்சிகளை தொடங்க இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரரை கணித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வி அடைந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் பொதுவாக எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக திகழ்வதால் ஸ்டார்க், கம்மின்ஸ், பும்ரா ஆகிய வீரர்கள் கவனம் பெறக்கூடியவர்களாக இருக்கக்கூடிய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக் கூடிய வீரராக இருப்பார் என்று கணித்திருக்கிறார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் விரிவாக கூறும்போது “வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களில் இருந்து வெளியேறி, தற்போது சரியான நிலையில் இருப்பதாக உணர்கிறேன். மேலும் அவரது ஆற்றல் மற்ற வீரர்களை காட்டிலும் சிறந்த நிலையில் இருப்பது போன்று தோன்றுகிறது. இதனால் இந்திய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவரே அதிக விக்கெட் வீழ்த்தக் கூடிய வீரராக இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ரோகித் எச்சரிக்கையா இருங்க.. எங்க ஆள் ஒருத்தர் பேட்டிங்ல வேற மாதிரி இருக்காரு – மேக்ஸ்வெல் பேட்டி
ஹேசில்வுட் ஏற்கனவே 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 51 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடரிலும் அவரே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய வீரராக இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் கணித்திருக்கிறார். பும்ரா, ஸ்டார்க், கம்மின்ஸ் என்று முன்னணி பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் பாண்டிங் இவரை தேர்வு செய்திருப்பது ரசிகர்களிடையே சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.