இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் மிகச் சிறப்பாக தயாராகி இருப்பதாகவும், அது இந்திய அணிக்கு பிரச்சினையாக மாறும் என்றும் ஆஸ்திரேலியா வீரர் பிளான் மேக்ஸ்வெல் கூறி இருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் சில வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணியின் குறிப்பிட்ட ஆதிக்கம்
கடந்த நான்கு வருடங்களில் உள்நாடு மற்றும் இந்தியாவில் தலா இரண்டு முறை என நான்கு முறை தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி இந்திய அணி இடம் தோற்று இருக்கிறது. தங்கள் நாட்டில் இரண்டு முறை இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை தோற்றத்தை அவர்கள் அவமானக் குறையாகவே கருதுகிறார்கள்.
அதே சமயத்தில் நான்காண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சாதிக்க முடியாவிட்டாலும் கூட, கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை வென்று தற்போது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் அணியாக இருக்கிறார்கள்.
சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறார் :
இது குறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது “பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித் தற்பொழுது மிகவும் அற்புதமாக இருக்கிறார். அவருடைய புட் வொர்க், டைமிங் மற்றும் மூவ்மெண்ட் அனைத்தும் அற்புதமாக இணைகிறது. அவருக்கு எதிராக வீசப்பட்ட எல்லாவற்றையும் அவர் அற்புதமாக எதிர் கொண்டு விளையாடினார். அவருக்கு கிரீன் லென்தில் வீசப்பட்ட இரண்டு பந்துகளை அற்புதமாக சமாளித்து விளையாடினார். அவர் நன்றாக வேலை செய்து டெக்னிக் உடன் ஒன்றி இருக்கிறார்”
இதையும் படிங்க : 299/7.. தமிழக அணியை காப்பாற்றிய 18 வயது வீரர்.. ஷாருக்கான் சாய் கிஷோர் ஏமாற்றம்.. ரஞ்சி டிராபி 2024
“கடந்த ஒரு வாரமாக அவர் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏன் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார் என்பதற்கான காரணம் தெரிகிறது. அவர் பயிற்சியில் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. அவர் வெளியேறி விளையாடிய விதம், அவர் கவர் டிரைவ் அடித்த விதம், அவர் சிறப்பாக தயாராகி விட்டார் என்று தெரிகிறது. மேலும் அவர் தன்னுடைய தொழில் நுட்பத்தில் சிறப்பான முறையில் வேலை செய்திருக்கிறார் என்றும் தெரிகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.






