டி20 உலகக் கோப்பை 2024

இந்தியாவ பைனல்ல ஓடவிட இத செய்யுங்க.. அந்த யூஸ்லெஸ் ஐடியா வேணாம் – தெ.ஆ-க்கு ரிக்கி பாண்டிங் ஐடியா

இந்த மாதம் துவக்க முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்காக தென் ஆப்பிரிக்கா அணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.இந்த மாதம் துவக்க முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்காக தென் ஆப்பிரிக்கா அணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி தன்னுடைய 32 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அவர்கள் வழக்கமாக அரை இறுதிக்கு வருவதும் அங்கு பதட்டத்தில் தோற்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இதை மாற்றி இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. எனவே இந்த போட்டி அவர்களுடைய மொத்த நாட்டிற்கும் உணர்வுபூர்வமான ஒன்றாக மாறியிருக்கிறது. டி20 உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் பெரிய போட்டியில் இல்லாத தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டியில் இருப்பது மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனான ரிக்கி பாண்டிங் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டியில் என்ன செய்தால் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்பது குறித்து அந்த அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நிறைய அணிகள் இறுதிப்போட்டியை இன்னும்ஒரு சாதாரண போட்டி என்கிறார்கள். அவர்கள் அந்த இறுதிப் போட்டி என் தீவிரத்தை மறைக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி எல்லாம் செய்ய வேண்டியது கிடையாது. இது பயனுள்ளதாக இருப்பதில்லை. நீங்கள் இன்று இரவு மகிழ்ச்சியாக இருங்கள். நாளையும் மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் நீங்கள் தயாராக இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : பைனலில் தோத்தா ரோகித் பார்படாஸ் கடலில் குதிக்கணும்.. ஆனா ஒரு காரணத்தால நம்பிக்கை இருக்கு – கங்குலி பேச்சு

தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி அடையாத அணியாக இருக்கிறது. அவர்கள் எதையும் கடினமாக சென்று மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் களத்திற்கு சென்று தங்களுக்கும் தங்கள் அனைத்தும் சிறந்த வெர்சனாக இருக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே சிறந்த வாய்ப்பை வழங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் இதைச் செய்தால் அவர்களை வெற்றி பெறுவது கடினம்” என்று கூறி இருக்கிறார்.

Published by