எங்கள எங்க மண்ணுல ஜெயிக்க.. இந்திய அணியில் இவங்களால மட்டும் தான் முடியும் – ஷேன் வாட்சன் கருத்து

0
672
Watson

ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வெல்வதற்கு இந்திய அணியில் யார் முக்கிய காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது? என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியிருக்கிறார்.

இந்திய அணி இந்த ஆண்டு அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை பெர்த் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு இரு நாட்டு ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு காரணம்

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டை வெல்ல வேண்டும் என்றால் எதிரணியில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினால் மட்டுமே முடியும். இந்திய அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணமாக 20 விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெல்லக்கூடிய அணியாக இருந்திருக்கிறது ஆனால் டெஸ்ட் தொடரை வெல்லக்கூடிய அணியாக இல்லை. ஏனென்றால் முழுமையான ஒரு பவுலிங் யூனிட் இந்திய அணியின் கையில் இல்லாமல் இருந்து வந்தது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பின்னால் இந்திய பவுலிங் யூனிட் தரமான முறையில் மாறியது. பின்பு வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரவில்லை இந்திய அணி ஆரம்பித்தது.

- Advertisement -

ஷேன் வாட்சனின் கணிப்பு

இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறும் பொழுது “இந்தியாவின் பாஸ்ட் பவுலிங் யூனிட் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கும் மிக முக்கிய காரணமாக இருக்கும். அவர்கள் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கான அந்த திறமையோடு இருக்கிறார்கள்.ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் தங்களிடம் இருக்கும் வேகம் பந்துவீச்சாளர்களை சரியான முறையில் மாற்றி பயன்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க : ஆஸியில ஜெய்ஸ்வால் இந்த ஒரு மாற்றத்தை செஞ்சே ஆகணும்.. மத்தபடி வேற லெவல் பையன் – பிரையன் லாரா அறிவுரை

“மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் விக்கெட் கைப்பற்றக்கூடிய மிகச்சிறந்தவராக இருக்கிறார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும் அஸ்வினை போலவே செயல்பட கூடியவர். ஆனால் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சீரான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்களா என்று பார்க்க வேண்டும். இவர்கள் சிறப்பாக செயல்படுவது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -