“என் பையனோட இந்த வளர்ச்சிக்கு.. இவர் ஒருத்தர்தான் காரணம்” – ஜெய்ஸ்வால் தந்தை உருக்கமான பேட்டி

0
302
Jaiswal

இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார். சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக பல வீரர்களை பல சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்களை எல்லாம் தள்ளி வைத்து மிக வேகமாக ஜெய்ஸ்வால் புதிய சூப்பர் ஸ்டார் ஆக உருவாக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் எப்படி அதிரடியாக விளையாடுவாரோ அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன் கிடைத்த ஐபிஎல் தொடர்கள் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. கடந்த சீசனில் அவர் 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்து மிரட்டினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அவருக்கு எடுத்ததும் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டை அதற்கே உரிய முறையில் மெதுவான ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக விளையாடி, அறிமுகத்திலேயே சதமும் அடித்து அசத்தினார்.

பின்பு வெஸ்ட் இண்டிஸ் அணிவுடனான டி20 தொடரில் இசான் கிஷான் சொதப்ப ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக தன்னுடைய இடத்தை இதுவரை இழக்கவே இல்லை. அவருடைய பணிச்சுமை காரணமாக, எதிர்வரும் டி20 உலக கோப்பை இருப்பதாலும், இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் அறிமுகத்தை தராமல் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவருடைய வெற்றிக்கு காரணம் குறித்து பேசிய ஜெய்ஸ்வால் தந்தை பூபேந்திரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல் திறன் பயிற்சியாளர் ஜூபின் பருச்சாதான் முக்கியமான நபர் எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் உடன் இணைந்து அவருடைய பயிற்சியாளர் ஜூபின் நிறைய உழைத்திருக்கிறார். அவரே சென்று ஜெய்ஸ்வாலுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி கொடுத்து இருக்கிறார். ஜெய்ஸ்வால் மைதானத்தில் கீழே விழும் வரை அவரை விடாமல் தொடர்ந்து பயிற்சி அளித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் இந்த உயரத்திற்கு வளர காரணம் அவர்தான்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ.. 7 பந்து 36 ரன்கள்.. ஆன்ட்ரே ரசல் காட்டடி.. சிஎஸ்கே மொயின் அலி வேடிக்கை மட்டுமே பார்த்தார்

இதுகுறித்து 2023 ஆம் ஆண்டில் ஜுபின் பருச்சா பேசும் பொழுது “ஒருவர் சாம்பியன் ஆவதற்கு ஒரு கிராமமே உதவி செய்ய வேண்டியதாக இருக்கும் என்று சொல்வார்கள். இந்த மாதிரி ஜெய்ஸ்வால் வளர்ச்சியில் நானும் ஒரு காரணமாக இருக்கிறேன். நான் மட்டுமே காரணம் கிடையாது என மிகப் பெருந்தன்மையாகக் கூறியிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.