வீடியோ.. 7 பந்து 36 ரன்கள்.. ஆன்ட்ரே ரசல் காட்டடி.. சிஎஸ்கே மொயின் அலி வேடிக்கை மட்டுமே பார்த்தார்

0
228
Russell

தற்பொழுது பங்களாதேஷ் நாட்டில் பிபிஎல் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் தலைசிறந்த டி20 ஆல் ரவுண்டர் கரீபியன் ஆண்ட்ரே ரசல் கோமிலா விக்டோரியா அணிக்கு விளையாடுகிறார்.

நேற்று இந்த தொடரில் பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தில் இருந்து வரும் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கோமிலா விக்டோரியா அணி விளையாடியது.

- Advertisement -

152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கோமிலா விக்டோரியா அணி 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. இதற்கடுத்து லிட்டன் தாஸ் மற்றும் மகமது இஸ்லாம் இருவரும் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். ஆனாலும் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆட்டத்தில் கொஞ்சம் நெருக்கடி நிலைமை உண்டானது.

இதற்கு அடுத்து பினிஷராக ஆன்ட்ரே ரசல் உள்ளே வரும்பொழுது 33 பந்துகளுக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் வெறும் 12 பந்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு இதில் 43 ரன்களை ரசல் மட்டுமே தனியாக அடித்து நொறுக்கி அணியை வெகு எளிதாக வெற்றி பெற வைத்து விட்டார். ரசல் உடன் இணைந்து பேட்டிங்கில் நின்ற சிஎஸ்கே மொயின் அலி வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

முதல் 5 பந்துகளை சந்தித்த ரசல் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் முதல் இரண்டு பந்துகளில் அவருக்கு ரன் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் கடைசி ஏழு பந்துகளில் மட்டும் 36 ரன்கள் குவித்தார். பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரி சிக்ஸர்களாக பறந்தன.

- Advertisement -

இத்தோடு அவர் முதலில் பந்து வீசி இருந்த பொழுது 20 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். இதன் காரணமாக இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உள்நாட்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக கடந்த ஆண்டின் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் டி 20 அணிக்கு ரசல் திரும்பினார். இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வென்றார். மேலும் அந்த தொடரை வெஸ்ட் இண்டிஸ் மூன்றுக்கு இரண்டு என வெல்லவும் செய்தது.

இதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு இரண்டு என வெஸ்ட் இண்டீஸ் இழந்தது. ஆனாலும் மூன்றாவது போட்டியில் ரசல் அதிரடியாக 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். மேலும் அவரை ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்தத் தொடரில் எல்லா போட்டிகளிலும் வெஸ்ட் இண்டிஸ் 200 ரன்கள் தொட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கவாஸ்கர் காம்ப்ளி கோலி.. அடுத்த 2 டெஸ்டில் ஜெய்ஸ்வால் உடைக்க முடிந்த மெகா சாதனைகள்

தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் டி20 அணியை பார்க்கும் பொழுது டேரன் சமி தலைமையில் இரண்டு டி20 உலக கோப்பைகளை வென்ற அணி போல் பலமாக தெரிகிறது. மேலும் உள்நாட்டில் டி20 தொடர் நடைபெற இருப்பதால் அவர்கள் இந்த முறை மிகவும் அச்சுறுத்தலான அணியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.