“காயம் சரியானது என்னோட அதிர்ஷ்டம்.. ஆனா 5 மாசத்துக்கு முன்னாடி இப்படி இல்ல!” – அரைசதம் அடித்த வில்லியம்சன் பேச்சு!

0
555
Williamson

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் எப்பொழுதும் மறக்கவே முடியாத ஒன்றாக இருக்கும்!

அந்தப் போட்டியில் இங்கிலாந்து ரசிகர்களே நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் அணுகுமுறைக்காக பரிதாபப்பட்டு இருக்கும்.

- Advertisement -

அந்த அளவிற்கு கேன் வில்லியம்சன் களத்தில் மிகவும் பெருந்தன்மையான மனிதராக இருந்தார். மேலும் அந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு யாரும் எதிர்பாராத வகையில் முன்னேறி, இங்கிலாந்து அணிக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து சாதித்தது நியூசிலாந்து.

தற்போது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கும் மிகச் சிறப்பான முறையில் நியூசிலாந்து தயாராகி வந்திருக்கிறது. இன்று பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்று இருக்கிறது.

இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கால் முட்டியில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்ப வந்தார். அவர் அழைத்ததும் எடுத்து ஆட்டம் இழக்காமல் அடுத்தவர்கள் விளையாட வழி விட்டு சென்றார்.

- Advertisement -

அதே சமயத்தில் பயிற்சி போட்டியில் அவர் விளையாடினாலும் அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய கேன் வில்லியம்சன்
“நடுவில் வந்து ஓரளவுக்கு பேட்டிங் செய்வது நன்றாக இருக்கிறது. காயம் தற்பொழுது நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சில ஐசிங் செயல்முறை தற்போது இருக்கிறது. ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்பு இது இப்படி இல்லை. குணமடைந்தது அதிர்ஷ்டம்.

மேலும் அணியில் என்னுடைய பெயர் வந்ததற்கு மகிழ்ச்சி. தற்பொழுது போட்டி மற்றும் உடற்பயிற்சி செய்ய முடிவது நல்ல விஷயம். எப்பொழுதும் வேலை செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன.

இது நல்ல விக்கெட்டில் நல்ல பேட்டிங் செயல் திறன். பாகிஸ்தான் பொதுவாக சிறந்த ஒரு அணி. வெவ்வேறு எதிரணிகளுக்கு எதிராக வெவ்வேறு வகையான விக்கெட்டுகளில் விளையாட இருக்கிறோம். தற்பொழுது முதல் போட்டிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!