உலகில் பெரும்பாலான நாடுகளில் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்றாலும் அனைத்து சர்வதேச வீரர்களின் கனவு என்பது ஒரு முறையாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஐபிஎல் 2024 ஆம் ஆண்டிற்கான ஏலம் வருகின்ற 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் என 1166 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். 77 வீரர்களுக்கான இடங்களில் காலி இருக்கும் நிலையில் 1000-கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதால் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ விதிமுறைகளின் படி வீரர்களே தங்களது அடிப்படை விலையை நிர்ணயிக்கலாம் என அறிவித்திருந்தது. பல வீரர்களும் தங்களது அடிப்படை விலையை 2 கோடி மற்றும் 1.5 என நிர்ணயத்திற்கும் நிலையில் சில முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது அடிப்படை விலையை குறைத்து நிர்ணயித்துள்ளனர். இதன் மூலம் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் எனவும் அணிகள் எலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் என்பதால் இவ்வாறு குறைத்துள்ளனர். இதன் மூலம் அதிக விலைக்கு அணிகளால் வாங்கப்படலாம் என்ற புத்திசாலித்தனமான யோசனையும் இருக்கிறது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தங்களது அடிப்படை விலையை குறைத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஏலத்தில் பெயரை பதிவு செய்து இருக்கும் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.
ரச்சின் ரவீந்தரா: நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தரா. நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தவர். உலகக்கோப்பை தொடரில் 10 ஆட்டங்களில் உள்ள அடி 578 ரன்கள் எடுத்தார். மேலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திலும் இடம் பெற்றார். இடது கை ஆட்டக்காரரான இவர் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் ஆடக்கூடியவர். இடது கை சுழற் பகுதி வீச்சாளராகவும் செயல்படுபவர். இவர் தனது அடிப்படை விலையை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார். இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இவர் 2 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்தாலும் இவரை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவும். எனினும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக தனது அடிப்படை விலையை 50 லட்சம் ஆக குறைத்து இருக்கிறார்.
சிவம் மாவி: இந்திய அணியின் இளம் பேகப் பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் போட்டி தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவர் இந்திய அணிக்காகவும் விளையாடி இருப்பதால் அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கலாம். எனினும் ஏலத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக தனது அடிப்படை விலையை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி இவரை 6 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கே எஸ் பரத்: இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த பரத் குஜராத் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஐபிஎல் போட்டி தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இவரை குஜராத் அணி கடந்த வருடம் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. எனினும் இந்த வருட ஐபிஎல் எழுத்தில் தனது அடிப்படை உரையை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார் இவர்.
டேரில் மிட்சல்: நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான டேரில் மிட்சல் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டு சதங்களுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பத்து போட்டிகளில் விளையாடி 552 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடர்களில் விளையாடிய இவர் கடந்தாண்டு விடுவிக்கப்பட்டார். தற்போது நல்ல பார்மில் இருப்பதால் இவரை எடுக்க அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். இவரும் தனது அடிப்படை விலையை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார்.
ஷாருக்கான்: தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரரான இவர் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த வருடம் பஞ்சாப் அணி இவரை விடுவித்து இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவரை 9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. அந்த அணியின் பினிஷர் ரோலில் செயல்பட்டு வந்தார். அதிரடி வீரரான இவர் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி போட்டியை முடிக்கும் திறமையும் கொண்டவர். எனவே இவருக்கும் ஏலத்தில் எடுப்பதில் கடும் போட்டி இருக்கும். இவரும் தனது அடிப்படை விலையை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார்.