இன்று அடித்த சதத்தின் மூலம் விராட் கோலி செய்த ஐந்து புதிய சாதனைகள்!

0
3531
Viratkohli

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 தொடரை இழந்து தற்பொழுது மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் நகரத்தில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரை முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஏற்கனவே இந்தியா அணி கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

- Advertisement -

பேட்டிக் செய்ய சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய உலக தரமான பேட்ஸ்மேன்கள் இலங்கையின் பந்துவீச்சை மைதானத்தின் நாலா புறங்களிலும் சிதறடித்தார்கள். ரோகித் சர்மா 42 ரன்களில் வெளியேற, கில் சதம் அடித்து அசத்தி வெளியேறினார். இவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி ஆரம்பத்தில் பொறுமை காட்டி பின்பு டி20 போட்டியில் விளையாடுவது போல சரமாரியாக இலங்கை பந்துவீச்சை நொறுக்கித் தள்ளி 110 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 166 ரண்களை விளாசி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். இது விராட் கோலிக்கு 46வது ஒரு நாள் போட்டி சதமாகும்.

இந்தச் சதத்தின் மூலம் விராட் கோலி ஐந்து புதிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். அது என்னென்ன சாதனைகள் என்று இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்ப்போம்.

சாதனை 1:
ஒரு அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்து சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இரண்டாவது இடத்திலும் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒன்பது சதங்களுடன் இருக்கிறார். இவருடன் சச்சின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒன்பது சதங்களை விளாசி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

சாதனை 2:
ஒரு நாள் போட்டிகளில் சொந்த நாட்டில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு 21 சதங்களுடன் முன்னேறி இருக்கிறார்.

சாதனை 3:
ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க வீரராக இல்லாமல் அதிக முறை 150 ரன்கள் தாண்டி ஆறாவது முறையாக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் மூன்று முறை அடித்து இருக்கிறார்.

சாதனை 4 :
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 150 ரன்கள் அடித்து நான்கு முறை ஆட்டமிழக்காமல் இருந்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இந்த சாதனையை மூன்று முறை செய்திருக்கிறார்.

சாதனை 5:

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அணிகளுக்கு எதிராக 150 ரன்கள் மேல் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஐந்து முறை செய்து நிகழ்த்தியிருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் சச்சின் இதை நான்கு முறை செய்திருக்கிறார்கள்.