இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவால் நிகழ்த்தப்பட்ட அட்டகாசமான ஐந்து சாதனைகள்!

0
6000
IndvsAus

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஐந்து சாதனைகளை செய்துள்ளது. இந்தச் சிறிய கட்டுரையில் அந்த ஐந்து சாதனைகளையும் பார்ப்போம்!

விராட் கோலி;

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 20 ரன்கள் எடுத்ததின் மூலம் மிக வேகமாக சர்வதேச 25 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற உலகச் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். இந்தச் சாதனையை 549 இன்னிங்ஸில் செய்திருக்கிறார். இதற்கு முன் முதலிடத்தில் இருந்தவர் சச்சின் அவரது இன்னிங்ஸ் 577!

ரவீந்திர ஜடேஜா :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஓவர்கள் பந்து வீசி ஏழு விக்கட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்த போட்டியின் மூலம் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தியிருக்கிறார். அவர் வீசிய ஓவர்கள் 12.1. இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக அஸ்வின் 2016ஆம் ஆண்டு 13.5 ஓவர்கள் பந்துவீசி ஏழு விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தது சாதனையாக இருந்தது!

ரோகித் சர்மா :

ஒரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் 30 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய கேப்டன் என்கின்ற சாதனையை 20 பந்துகளில் 31 ரன்களை 155.00 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து, ரகானே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 27 பந்துகளில் 38 ரன்களை 140.74 ஸ்ட்ரைக்ரேட்டில் எடுத்ததை முறியடித்து இருக்கிறார்!

ரவிச்சந்திரன் அஸ்வின்;

உலகின் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேனான, ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித்தை அதிக முறை ஆட்டம் இழக்க செய்தவர் என்ற சாதனையை அஸ்வின் இன்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவரை வீழ்த்திய போது செய்தார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் எட்டு முறை அவரை அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஏழு முறை அவரை வீழ்த்தி பாகிஸ்தானின் சுழற் பந்துவீச்சாளர் யாசிர் ஷா இருக்கிறார்!

இந்தியா;

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, தான் அதிக டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய அணியாக ஆஸ்திரேலியாவை சேர்த்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை இதுவரை 32 முறை இந்திய அணி இந்திய அணி தோற்கடித்து இருக்கிறது. இதற்கு முன்பு 31 முறை இங்கிலாந்து அணியை தோற்கடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -