ஐபிஎல்-ல் முதல் பழங்குடி வீரர்.. 3.60கோடி லெப்ட் ஹேண்ட் பொல்லார்டு.. இந்த ராபின் மின்ஸ் யார்?

0
3373
Robin

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு ஏலத்திற்கு போய், ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக இவரது கேப்டன் பேட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு ஏலத்திற்கு போய் இரண்டாவது இடத்தை, ஐபிஎல் ஏல வரலாற்றில் அடைந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய வீரர்களின் ஹர்சல் படேல் 11 கோடி ரூபாய்க்கு மேல் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி பெரிய தொகை கொடுத்து வாங்குவதற்கு இந்திய அனுபவ வீரர்கள் யாரும் ஏலத்தில் இல்லை.

ஆனால் இதுவரை ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கு விளையாடாத நிறைய இளம் வீரர்களுக்கு இந்த ஐபிஎல் மினி ஏலம் நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 வயதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை எட்டு கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியது. அதேபோல் சுபம் துபேவை 5 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது.

- Advertisement -

மேலும் ஜார்க்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் குஸ்க்ராவை டெல்லி 7.20 கோடி கொடுத்து வாங்கியது. தமிழகத்தின் சித்தார்த் மணிமாறனை இரண்டு கோடிக்கு மேல் கொடுத்து லக்னோ வாங்கியது.

இந்த வரிசையில் மீண்டும் ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பிங் 21 வயதான இடது கை பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ் என்பவரை 3.60 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி உடன் போட்டியிட்டு குஜராத் அணி வாங்கியிருக்கிறது.

இந்த இளம் வீரரின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தற்பொழுது ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர்தான் இவருக்கு கிரிக்கெட் மீதான காதலை ஊட்டியவர்.

இந்த இளம் வீரர் ஏன் மிகவும் சிறப்பானவர் என்றால், ஐபிஎல் தொடருக்கு வரும் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வீரர் இவர்தான். இந்தக் காரணத்தினால் இவருக்கு சிறப்பு கூடியிருக்கிறது.

மேலும் எட்டு வயதிலிருந்து கிரிக்கெட்டை தொட்டுவிட்டாலும், பத்தாவது வகுப்பை முடித்தபின் இவர் முழு நேர கிரிக்கெட்டராக மாறிவிட்டார். தற்போது வரை இவர் ஜார்கண்ட் மாநில அணிக்கு முதல் தர போட்டிகளில் அறிமுகமாகவில்லை. ஆனால் ஜார்க்கண்ட் 19 வயது மற்றும் 25 வயது உட்பட்டவர்களுக்கான அணிகளை கேப்டனாக வழி நடத்தி இருக்கிறார்.

இவரை லக்னோ, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய ஐபிஎல் அணிகள் திறமை கண்டறியும் பயிற்சிக்கு அழைத்து இருக்கிறார்கள். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவர் இடம்பெற்று இருந்தார்.

இந்த நிலையில் மும்பை இவரை ஏலத்தில் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டியது. ஆனால் இவரை திடீரென உள்ளே வந்து குஜராத் டைட்டன்ஸ் வாங்கி ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்த இளம் வீரரை இடதுகை பொல்லார்டு என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!