மணி 5.25.. தக்கவைத்த குஜராத்.. 7.25 ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணியில்.. நடுவில் என்ன நடந்தது?

0
10076

17ஆவது ஐபிஎல் சீசனுக்காக மினி ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதன் பொருட்டு ஒவ்வொரு அணியும் தாங்கள் வெளியேற்றும் வீரர்கள் மற்றும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள், பரிமாறிக் கொள்ளும் வீரர்கள் என இறுதியாக செய்து முடிப்பதற்கு கடைசி நாளாக நேற்று இருந்தது.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியை விட்டு தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் வருகிறார் என்கின்ற தகவல் இணையத்தை மூன்று நான்கு நாட்களாக சுற்றி வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களுடைய தக்க வைக்கப்பட்ட வீரர்கள் விவரத்தை நேற்று வெளியிட்ட பொழுது அதில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெற்று இருந்தது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் மிகப் பிரபலமான நம்பிக்கைக்குரிய ஆங்கில கிரிக்கெட் இணையதளங்கள் ஹர்திக் பாண்டியா 15 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டு விட்டார் என்று அழுத்தமாக கூறின. மேலும் இந்த தகவல் உறுதியென கிரிக்கெட் வட்டாரத்தில் பலரும் கூறி வருகிறார்கள். ஏறக்குறைய இது முடிவாகிவிட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வைத்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் மும்பை அணி எட்டு வீரர்களை வெளியேற்றி 15 கோடி மட்டுமே கையில் வைத்திருந்தது. இந்தப் பதினைந்து கோடியை ஹர்திக் பாண்டியாவுக்கு செலவழித்து விட்டால், மிச்ச வீரர்களை வாங்குவதற்கு அந்த அணியிடம் பணம் இருக்காது என்கின்ற சந்தேகம் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் 17.25 கோடிக்கு மும்பை கடந்த முறை வாங்கிய ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை அதே விலைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டிரேடிங் செய்து விட்டதாக இன்னொரு தகவல் மீண்டும் நம்பிக்கையான ஆங்கில கிரிக்கெட் இணையதளங்களில் வெளியானது. இந்த தகவலும் உறுதி ஆகிவிட்டது.

அதே சமயத்தில் கடைசி நாளான நேற்று இரண்டு அணிகளுமே தங்களுடைய இறுதி அணியை அறிவித்த பிறகு, எப்படி வீரரை பரிமாற்றிக் கொள்ள முடியும்? என்கின்ற ஒரு சந்தேகம் நிலவியது.

நேற்று கடைசி நாள் என்பது வீரர்களை விடுவிப்பதற்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 19ஆம் தேதி மினி ஏலம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரையில், வீரர்களை அணிகள் மாற்றிக் கொள்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. எனவே இதைப் பயன்படுத்தி ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கேமரூன் கிரீன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்!