இரண்டு ஸ்டம்ப்புகளை உடைத்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த அர்ஷ்தீப் சிங்… ஒரு ஸ்டம்ப் விலையே இத்தனை லட்சமா?

0
4511

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் இரண்டுமுறை ஸ்டம்ப்பை உடைத்து விக்கெட் எடுத்தார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் அரசதீப் சிங். இவர் உடைத்த ஒரு ஸ்டம்ப் விலை தலைசுற்ற வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமரூன் கிரீன்(67) ரோகித் சர்மா(44) மற்றும் சூரியகுமார் யாதவ்(57) ஆகியோர் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டனர். கிட்டத்தட்ட இலக்கை நெருங்கும் வரை எடுத்துச் சென்றனர்.

போட்டியின் 20ஆவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷதீப் சிங் இருபதாவது ஓவரை வீசினார். அப்போது களத்தில் இருந்த டிம் டேவிட் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்துக்கொடுக்க இரண்டாவது பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா ரன் ஏதும் எடுக்க முடியவில்லை.

மூன்றாவது பந்தையும் எதிர்கொண்ட திலக் வர்மா, கிளீன் போல்ட் ஆனார். அப்போது ஸ்டம்ப் இரண்டாக உடைந்தது. அடுத்து உள்ளே வந்த நேஹால் வதேரா ஸ்டம்ப்பையும் உடைத்தார் அர்ஷ்தீப் சிங். இறுதியில் இருபதாவது ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டது

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அர்ஷ்தீப் சிங், “இன்றைய போட்டியில் நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட அணியின் வெற்றிக்கு உதவியது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கிறது. டெத் ஓவர்களில் தொடர்ந்து விமர்சனங்கள் சந்தித்து வந்தேன். அதற்காக என்னுடைய ஓடும் அமைப்பையும் மாற்றிக் கொண்டேன். பந்து வீசும் கோணத்தையும் மாற்றிக் கொண்டேன். இது எனக்கு நன்றாக உதவி இருக்கிறது. நோபால் வீசுவது தவிர்ப்பதற்காக இதனை செய்திருக்கிறேன்.” என்றார்.

மும்பை அணிக்கு எதிராக அர்ஷ்தீப் சிங் ஸ்டம்பை உடைத்தது பற்றி ஒரு பக்கம் பேசி வந்தாலும் மற்றொரு பக்கம் உடைக்கப்பட்ட ஸ்டம்பின் விலையை கேட்டு பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் விளக்கு எரியும் ஸ்டம்ப் பெரும்பாலும் வெள்ளை பந்து போட்டிகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மூன்று ஸ்டெம்ப் மற்றும் இரண்டு பெயில்ஸ் என மொத்த செட்டின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும். இந்திய ரூபாய் மதிப்பு படி 32 முதல் 35 லட்சம் ரூபாய் வருகிறது. ஒரே போட்டியில் இரண்டு ஸ்டம்ப்பை உடைத்தால் எவ்வளவு இழப்பு என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.