புவனேஸ்வர் குமாரை பார்த்து பயம் எல்லாம் கிடையாது – ஜாஸ் பட்லர் ஓபன் டாக்!

0
7644
Butler

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை ஆஸ்திரேலியாவின் அடிலைடு மைதானத்தில் இங்கிலாந்தை இரண்டாவது அரையிறுதி போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி!

இன்று சிட்னி மைதானத்தில் நடந்த முதல் அரை இறுதி போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை அபாரமாக வென்று பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது!

- Advertisement -

பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள காரணத்தால், நாளை நடக்கும் இந்தியா இங்கிலாந்து போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த அரை இறுதி போட்டியில் இந்தியாவிலும் பட்சத்தில் 2007ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்வு அரங்கேறும்!

தற்போது நாளை நடக்க உள்ள அரை இறுதி போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் நிறைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். அதிலிருந்து சிலவற்றை நாம் இதில் பார்ப்போம்!

ஜாஸ் பட்லர் பேசும்பொழுது “புவனேஸ்வர் குமார் மிகவும் திறமையான பவுலர். ஆனால் நான் நிச்சயமாக அவரைக் கண்டு பயப்படவில்லை. இந்தியா திறமையான அணி. சில அருமையான வீரர்கள் அணியில் உள்ளார்கள். டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்துவதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். விக்கெட் எடுப்பது ரன் சேர்ப்பதை தடுக்கிறது. இந்திய அணியில் சாகல் அப்படிப்பட்ட விக்கெட் எடுக்கும் ஒரு நல்ல பந்துவீச்சாளர்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஜாஸ் பட்லர்
” இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை வெற்றி கேப்டன் மோர்கனிடம் நான் நிறைய பேசுகிறேன். அவர் சிறந்த வீரர் ஆனால் அணியை நான்தான் வழிநடத்துகிறேன். என் வழியில் என் அணி இருக்கும் ஆனால் அவர் எனக்கு ஒரு சிறந்த துணை ” என்று தெரிவித்திருக்கிறார்!

சூரியகுமார் யாதவ் பற்றி பேசிய ஜாஸ் பட்லர் ” அவர் அருமையான நிலையில் இருக்கிறார். அவர் நிறைய ஷாட்களை கொண்ட பிளேயர். ஆனால் எந்த நல்ல பேட்டரையும் ஆட்டம் இழக்கச் செய்ய ஒரு நல்ல பந்து போதும். அதைச் செய்ய நாங்கள் முயற்சிப்போம். பொதுவாக 160 என்பது நல்ல ரன். ஆனால் நாங்கள் அந்த பொதுவான ரன்னை அடிக்காமல் அதற்கு மேலும் எடுக்க விரும்புகிறோம். அடிலைடில் ஆட்டத்தில் எல்லா இடத்திலும் ஆடுகளம் ஒரே மாதிரி தான் இருக்கும். இதைத் தாண்டி எப்படி என்றாலும் நாம் சர்வதேச போட்டிகளில் நிலைமைக்கு ஏற்ப உடனே மாறியாக வேண்டும் ” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -