டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அதிவேக சதம் அடித்த 6 வீரர்கள்

0
4105
Shivnarine Chanderpaul

ஒரு கிரிக்கெட் வீரரின் முழு திறனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோதிக்கப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க பொறுமையும் பக்குவமும் அவசியம். ஒரு நாளுக்கு 90 ஓவர்கள் வீதம் மொத்தம் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டி நடத்தப்படும். பேட்ஸ்மேன்கள் அனைவரும் எந்த வித அவசரமும் இல்லாமல் மிகவும் நிதானமாக ஆடுவர். டி20 பார்வையாளர்கள் இந்த நிதான ஆட்டத்தை வெறுக்கின்றனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புஜாரா 525 பந்துகள் சந்தித்து இரட்டைச் சதம் விளாசினார். ஒரு இன்னிங்சில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா கைப்பற்றினார். டெஸ்ட்டில் இது போன்று நிதானமாக மட்டுமே ஆட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு சில வீரர்கள், 20 ஓவர் போட்டியில் விளையாடுவது போல் சிக்ஸர்களை பறக்கவிடுவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி அதிவேக சதம் அடித்த வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. பிரெண்டன் மெக்கல்லம் – 54 பந்துகள்

Brendon Mccullum Test
Photo: Getty Images

2016ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கிரிஸ்ட்சர்ச் மைதானத்தில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை ஆடினார் மெக்கல்லம். ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியாகவும் அது அமைந்தது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று நியூசிலாந்து அணியை பேட் செய்ய அழைத்தது.

நியூசிலாந்து அணி, 19 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஐந்தாவது வீரராக பிரெண்டன் மெக்கல்லம் களமிறங்கினார். தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் அவர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 54 பந்துகளில் சதம் அடித்து, டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஹேசல்வுட், பேட்டின்சன், நாதன் லியோன் பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. விவியன் ரிச்சர்ட்ஸ் – 56 பந்துகள்

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விவியன் ரிச்சர்ட்ஸ். டெஸ்ட்டில் அவர் 121 இன்னிங்சில் 8,540 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 50.23 ஆகும். பயம் அறியாமல் அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போனவர்.

- Advertisement -

1986ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய அணி பங்கேற்றது. முதல் 4 போட்டிகளில் மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியின் 2வது இன்னிங்சில் களமிறங்கிய ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

1990களில் ஒரு பேட்ஸ்மேன் 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினாலே அனைவரும் பெரியதாக எண்ணுவர். அப்படிப்பட்ட காலத்தில், விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக ஆடி 190 ஸ்டிரைக் ரேட்டில் சதம் அடித்தார். அவரது இன்னிங்சில் 7 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.

3. மிஸ்பா உல் ஹக் – 56 பந்துகள்

பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி துபாய் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 570 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.

டெஸ்ட், ஓடிஐ, டி20 என அனைத்து பார்மட்டிலும் மிஸ்பா உல் ஹக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டிலே ஆடுவார். அதனால் அவரை அனைவரும் ‘ டக் டக் ‘ என்று அழைக்க ஆரம்பித்தனர். தன்னுடைய பட்ட பெயரை பொய்யாக வேண்டுமென்ற வெறியில், மிஸ்பா உல் ஹக் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். 58 பந்துகளில் 101 ரன்கள் அடித்து, அவரது பட்ட பெயரை அனைவர் மனதில் இருந்தும் போக்கினார்.

4. ஆடம் கில்கிறிஸ்ட் – 57 பந்துகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில், ஆடம் கில்கிறிஸ்ட் மிகவும் மதிப்பிர்க்குறிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். இவர் பேட்டிங் ஆட வந்தால், அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. 2016 ஆஸ்திரேலியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட், பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, பேட்டிங்கில் சுதப்பியது. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 215 ரன்களுக்கு சுருட்டி 29 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 365/5 என்ற நிலையில் இருக்கும் போது கில்கிறிஸ்ட் களமிறங்கினார். முதல் 40 பந்தில் அவர் அரை சதம் அடித்தார். அடுத்த 17 பந்தில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர்.

57 பந்தில் கில்கிறிஸ்ட் சதம் அடித்த பின், ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றதோடு ஆஷஸ் கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டது.

5. ஜாக் கிரிகோரி – 67 பந்துகள்

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் இருந்தே கிரிகோரி அதிரடி காட்ட ஆரம்பித்தார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிறிது அதிர்ஷ்டமும் இருந்தது. மூன்று முறை தென்னாபிரிக்கா அணி வீரர்கள் கேட்ச்சை தவறவிட்டனர்.

அதைச் சிறப்பாக பயன்படுத்தி, 67 பந்துகளில் சதம் விளாசினார் கிரிகோரி. இச்சாதனையை அவர் 1921ல் நிகழ்த்தினார். அடுத்த 6 தசாப்தத்தில் இதை யாரும் முறியடிக்கவில்லை. குறைந்த நிமிடத்தில் சதம் அடித்த வீரரும் இவரே. கிரிகோரி, 74 நிமிடத்தில் சதம் அடித்தார்.

6. ஷிவ்நரைன் சந்தர்பால் 69 பந்துகள்

மேற்கிந்திய அணியின் மிக முக்கியமான மற்றும் உன்னதமான பேட்ஸ்மேன் சந்தர்பால். மேற்கிந்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர். மேற்கிந்திய அணிக்கு அவர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் மல மலவென சரிந்து கொண்டிருந்தது. ஆனால் சந்தர்பால் முழு திறனையும் வெளிப்படுத்தி, மிகவும் அதிரடியாக ஆடி 69 பந்துகளில் சதம் விளாசினார். அவருடன் இணைந்து ஜேக்கப்ஸ், முக்கியமான அரை சதம் அடித்தார். சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய பவுலர்கள், மேற்கிந்திய அணியை 237 ரன்களுக்கு சுருட்டினர். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றிந்தாலும் சந்தர்பாலின் அதிவேக சதத்தைப் பற்றியே அனைவரும் பெரியதாக பேசினர்.