லக்னோ அணியின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ரசிகர்களிடம் ஒப்படைத்த அணி உரிமையாளர்

0
400
Goenka Lucknow Team IPL

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது இந்திய அணி. தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாற்றை மாற்றி எழுத இம்முறை அதிக வாய்ப்புள்ளது இந்திய அணிக்கு. டெஸ்ட் தொடர் நடந்து கொண்டே இருந்தாலும் தற்போது ஐபிஎல் தொடருக்கு இந்திய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். வரும் பிப்ரவரி மாதம் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்க இருப்பதால் எந்த வீரர்கள் எந்த அணிக்கு ஆடப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 8 அணிகள் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்பதை பிசிசிஐ முன்னரே அறிவித்து விட்டது. 2 புதிய அணிகளாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதை இரண்டு அணிகளுமே ஏலத்துக்கு முன்பாக மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த மூன்று வீரர்களுள் இரண்டு இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்றும் அறிவித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ரஷித் கான், ஹர்திக், வார்னர், ரெய்னா போன்ற சிறந்த வீரர்கள் எல்லாம் அந்தந்த அணிகள் விடுவித்து உள்ளதால் இந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள இரண்டு அணிகளும் அதிக ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இரண்டு அணிகளில் ஒன்றான லக்னோ அணிக்கு முன்னாள் புனே அணியின் உரிமையாளர் தான் இதற்கும் உரிமையாளராக இருக்கிறார். அனைத்து புதிதாக என்ன பெயர் வைக்கலாம் என்பதை தாங்கள் முடிவு செய்யாமல் ரசிகர்களையே முடிவு செய்ய வைக்க உள்ளதாக கூறியுள்ளார் அந்த அணியின் உரிமையாளர். இதுகுறித்து அந்த அணியில் ட்விட்டர் பக்கத்தில் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. அவன் பெயரை தீர்மானிப்பதில் ரசிகர்களை எவ்வாறு அந்த அணி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்பதை அறிந்துகொள்ள லக்னோ ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்