சஞ்சு சாம்சன் நீக்கம் எதிரொலி.. பிசிசிஐயை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

0
1050

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிளேயிங் லெவனில் கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை சேர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபக் ஹூடா டி20 போட்டியில் பந்துவீச்சில் கலக்கியதால் அவருக்கு இன்று போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டதில் ரசிகர்கள் கோபப்படவில்லை.

- Advertisement -

ஆனால் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரிஷப் பண்டை பிசிசிஐ முன்னிலை படுத்தும் விதம் ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. சாம்சன் கடந்த சில போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார்.குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் தனி நாளாக போராடி ரன்களை குவித்தார். சாம்சனுக்கு தகுந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் தோனியை போல் உருவெடுக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.

எனினும் பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு வழங்க மறுக்கிறது. அப்படி அவருக்கு அணியில் இடம் கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரசிகர்கள் சஞ்சு சாம்சன் திறமையான வீரர் என்றும் அவரை பிசிசிஐ காரணமே இல்லாமல் ஒதுக்குவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் சில ரசிகர்கள், திறமையை மதிக்க தெரியாத இடத்தில் சஞ்சு சாம்சன் இருக்க வேண்டாம், அவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி அவரது திறமைக்கு மதிப்பு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சிலர் சஞ்சு சாம்சன் தான் பிசிசிஐக்கு சுலபான டார்கெட் என்றும் அவரை பிளேயிங் லெவன், காம்பினேஷன் என்று கூறி நீக்குவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரிஷப் பண்ட், திறமையான வீரராக இருந்தாலும் அவர் கடந்த ஒரு ஆண்டாகவே பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அவருடைய பழைய ஆட்டத்தை பார்க்கவே முடியவில்லை. ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து கொடுக்கப்படும் வாய்ப்புகளில் ஒரு சதவீதம் கூட பிசிசிஐ சஞ்சு சாம்சனுக்கு தருவதில்லை. நியூசிலாந்து தொடரில் சாம்சனுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாட வைக்கப்பட்டிருக்கிறார். ஒரு போட்டியில் வாய்ப்பு அளித்துவிட்டு அடுத்த போட்டியில் நீக்கினால் அவருடைய உத்வேகம் பாதிக்கப்படாதா என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்ப வருகின்றனர். சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதை கண்டித்து பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -