தமிழக வீரர் சாய் கிஷோருக்கு.. கில் செய்த காரியம்.. ரசிகர்கள் கடும் விமர்சனம்.. என்ன நடந்தது?

0
537
Gill

நடப்பு ஐபிஎல் 17வது சீசனில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் கேப்டன்சி ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இன்று டாஸ் வென்ற சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். பவர் பிளேவில் முதல் ஆறு ஓவர்களை ஆப்கானிஸ்தானின் அசமத்துல்லா ஓமர்சாய் மற்றும் தமிழக வீரர் சந்தீப் வாரியர் இருவரையும் வைத்து முடித்தார். மேலும் ஓமர்சாய் நான்காவது ஓவரையும் உடனடியாக முடித்தார். இதில் பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் பந்து வீசிய சந்தீப் வாரியர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

சுப்மன் கில் கேப்டன்சி ஆரம்பத்தில் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. அவர்களுக்கு கடைசியில் மோகித் சர்மா பந்து வீச்சுக்கு இருப்பதால், கையில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்களை பவர் பிளேவில் பயன்படுத்தியது சரியானதாக இருந்தது. அதே சமயத்தில் அஸமத்துல்லா ஓமர்சாய் நான்கு ஓவர்கள் தொடர்ந்து வீசியது ஏன் என்று புரியவில்லை.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க், பிரிதிவி ஷா, ஷாய் ஹோப் மூவரும் ஆட்டமிழந்து வெளியேற, இடதுகை பேட்ஸ்மேன்கள் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த இடத்தில்தான் சுப்மன் கில் பெரிய தவறு செய்ய ஆரம்பித்தார்.

இரண்டு பேரும் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள் என்று, இடதுகை ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் தமிழகத்தின் சாய் கிஷோரை பந்துவீச்சுக்கு கொண்டு வரவே இல்லை. அவர் கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 33 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : 18 பந்தில் 67 ரன்.. மோகித் சர்மா மோசமான சாதனை.. ரிஷப் பண்ட் தவான் ரெக்கார்டை உடைத்து அதிரடி

இந்த நிலையில் 18 ஆவது ஓவரில் அக்சர் படேல் ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு, சிறப்பாக பந்து வீசி இருந்த சந்தீப் வாரியருக்கு ஒரு ஓவர் இருந்தும், அந்த நேரத்தில் முதல்முறையாக சாய் கிஷோரை கில் பந்துவீச்சுக்கு கொண்டு வந்தார். அந்த ஓவரில் சாய் கிஷோர் மொத்தம் 22 ரன்கள் தந்தார். அதில் 21 ரன்களை வலது கை பேட்ஸ்மேன் ஸ்டப்ஸ்தான் அடித்தார். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு, சாய் கிஷோர் மாதிரியான முழு நேர இடது கை பந்துவீச்சாளரை பயன்படுத்தாதது பெரிய விமர்சனம் ஆகி வருகிறது. மேலும் அவரைத் தேவையே இல்லாமல் 19ஆவது ஓவருக்கு கொண்டு வந்தது விமர்சனத்தை இன்னும் அதிகமாக்குகிறது. கில் கேப்டன்சியை களத்திற்கு வெளியில் இருந்து நெக்ராவும் விமர்சனம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.