மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய பிசிசிஐ.. சாஹா,சாம்சன் இருக்கும் போது இஷான் கிஷன் எதுக்கு? வெளியான ரகசிய தகவல்

0
1516

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே பும்ரா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகிய நிலையில் கே எல் ராகுல் தற்போது இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே எஸ் பரத் ஏற்கனவே அணியில் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என இந்திய  அணி நிர்வாகம் முடிவு எடுத்தது. தற்போது ராகுலும் இல்லாத நிலையில் மாற்றுவீரரை அறிவிக்க பிசிசிஐ முடிவெடுத்தது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரஹானே பிசிசிஐ தேர்வு செய்தது. அனுபவ வீரருக்கு வாய்ப்பு கொடுத்ததன் மூலம் விக்கெட் கீப்பர் இடத்திற்கும் அனுபவ வீரர்களான விரித்மான் சாகா, சஞ்சு சம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிசிசிஐ தேர்வு குழு ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாத இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐயின் தற்காலிக தேர்வு குழு தலைவரான எஸ் எஸ் தாஸ், சாகாவின் பெயரை தாங்கள் ஆலோசிக்கவே இல்லை என்றும் பார்டர் கவாஸ்கர் தொடரில் மாற்று விக்கெட்டுப்பராக இசான் கிஷன் இடம் பெற்றிருந்ததால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

தமக்கு இதுதான் நடக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்த சாகா தமக்கு 39 வயதாகி விட்டதால் இனி என்னை இந்திய அணியில் சேர்க்க மாட்டார்கள் என ஏற்கனவே தேர்வு குழு உறுப்பினர் கூறிவிட்டார்கள். நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை வைத்து தான், அவர்கள் இங்கிலாந்துக்கு என்னை அனுப்புவார்களா என்று தெரியும்.

- Advertisement -

எனினும் என்னுடைய முழு கவனமெல்லாம் தற்போது உள்ள கிரிக்கெட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதில் தான் உள்ளது. மற்றபடி தேர்வு குழுவினர் எடுக்க முடிவு என் கையில் இல்லை என்று கூறியிருந்தார். சஞ்சு சாம்சன், சாகா போன்ற அனுபவ வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதேபோன்று சர்பிராஸ் காணும் கடந்த ரஞ்சி சீசனில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் அவர்களை எல்லாம் தேர்வு செய்யாமல்  இஷான் கிஷனை மட்டும் பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறது என ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகின்றனர்.