மும்பை இந்தியன்ஸ் அணிக்கு களத்தில் பயிற்சியாளர் மகேல ஜெயவர்த்தனவின் தலையீடு அதிகம் இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணம் என ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நேற்று இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 203 ரன்கள் எடுத்தது. மேலும் நேற்றைய போட்டியில் சிறப்பான முடிவாக திலக் வர்மாவை மூன்றாவது இடத்தில் களம் இறக்கியது. அதுவரையில் மும்பை பயிற்சியாளர்கள் குழு சரியான முறையில் செயல்பட்டு இருந்தது. மேலும் 200 ரன்கள் தாண்டி எடுத்ததால் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையும் அதிகம் காணப்பட்டது.
ஆனால் நேற்று மும்பை அணி பந்து வீச்சுக்கு வந்த பொழுது கொஞ்சம் கொஞ்சமாக களத்தில் இருந்த கேப்டன் மீது வெளியில் இருந்த பயிற்சியாளர்கள் நிறைய அழுத்தத்தை ஏற்படுத்தியதை தெளிவாக பார்க்க முடிந்தது. ஜெயவர்த்தனே, மலிங்கா, பொல்லார்டு என ஒவ்வொருவரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் ஏதாவது சிக்னல் செய்வதை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது.
இதன் காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒவ்வொரு முடிவையும் வெளியில் இருந்து கேட்டு எடுக்க வேண்டிய சிக்கலான சூழ்நிலை உருவானது. இந்த இடத்தில்தான் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கொடுத்த ஒரு யோசனை போட்டியை தோற்கும் அளவுக்கு மும்பை அணியை கொண்டு சென்று விட்டது என்று கூறப்படுகிறது.
நேற்று அஸ்வினி குமார் மற்றும் பும்ரா அடுத்தடுத்து இரண்டு சிறந்த ஓவர்களை வீசினார்கள். இதன் காரணமாக பஞ்சாப் அணியின் மீது பெரிய ரன் பிரஷர் ஏற்பட்டது. இதற்கு அடுத்த ஓவரை விக்கெட் டேக்கிங் எபிலிட்டி இருக்கக்கூடிய யாராவது வீசி விக்கெட் எடுக்க முடியுமா? என்று பார்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அந்த முக்கிய ஓவரை ரீஸ் டாப்லி இடம் கொடுக்க ஜெயவர்த்தனே கூறியதாக தற்போது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர் உயரமான ஆளிடம் பந்தைக் கொடு என்று சிக்னல் செய்வதான போட்டோக்கள் வெளியாகி இருக்கின்றன.
இதையும் படிங்க : அப்படி சொல்லாதீங்க கோச்.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. கம்பீரை வம்பு இழுக்கும் ரசிகர்கள்
இந்த குறிப்பிட்ட ஓவர்தான் நேற்று போட்டியை ஒட்டுமொத்தமாக மாற்றி பஞ்சாப் பக்கம் எடுத்துச் சென்றது. ஆனால் இந்த ஓவரை வீச வேண்டியது கேப்டன் ஹர்திக் பாண்டியாதான். ஆனால் பயிற்சியாளர் தலையீட்டின் காரணமாக அவர் வேறு ஒருவருக்கு கொடுக்க அது மொத்த போட்டியையும் தோற்கும் விதமாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது!