தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேச ஆரம்பித்த பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் செய்த காரியம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் முதல் தகுதி சுற்றில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நாளை ஆர்சிபி அணியை சந்திக்கிறது.
ஸ்ரேயாஸ் பாண்டிங் நட்பு
ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரது கூட்டணி டெல்லி கேப்பிடல்ஸ் காலத்தில் இருந்து தொடர்கிறது. இந்த இருவரும் சேர்ந்து டெல்லி அணியை அப்பொழுதே இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் மேற்கொண்டு ஒரு சீசன் இவர் காயத்தால் விளையாட முடியாமல் போக ரிஷப் பண்ட்டை கேப்டனாக்கி கெடுத்துக் கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக வந்ததுமே எவ்வளவு பணம் கொடுத்தும் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க தயாராக இருந்தார். இதன்படி 26.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. இப்போது இந்த ஜோடி நம்பிக்கையை கெடுக்காமல் சிறப்பாக செயல்பட்டு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்று இருக்கிறது.
ஸ்ரேயாஸ் செய்த காரியம்
இந்த நிலையில் நேற்று போட்டி முடிவுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பதற்காக வந்தனர். அப்பொழுது முதலில் பஞ்சாப் அணியின் வெற்றி கேப்டன் உடன் பஞ்சாப் கோச் என்று ரிக்கி பாண்டிங் தனது பேச்சை ஆரம்பித்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. இது எங்களுக்கு சிறந்த சீசன்.. மும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்த்தனே
இந்த நிலையில் உடனடியாக பேச்சில் குறுக்கிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் வின்னிங் கேப்டன் உடன் வின்னிங் கோச் என்று சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். உடனே ரிக்கி பாண்டிங் சிரித்தபடியே வின்னிங் கோச் என்று சொல்லிக் கொண்டார். தனது பயிற்சியாளர் மீது ஸ்ரேயாஸ் ஐயர் நிறைய மரியாதை வைத்திருக்கிறார். நேற்று ஒரு சின்ன வார்த்தையை திருத்தி அவர் செய்த காரியத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகிறார்கள். மேலும் கே.கே.ஆர் அணியில் மெண்டராக இருந்த கம்பீரை இதில் இழுத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.






