என்னை செலக்ட் பண்ணாததுக்கு காரணம்.. பாபர் அசாம் பிரச்சனை தான்.. தப்பா போயிடுச்சு – பகார் ஜமான் பேட்டி

0
450
Zaman

தற்போது பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருக்கும் பகார் ஜமான் இதற்கான காரணம் குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடியான வெற்றிகரமான வீரராக பகார் ஜமானுக்கு திடீரென வாய்ப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்திவிட்டது. இதற்குப் பின்னணியில் பாபர் அசாம் நீக்கம் பற்றிய பிரச்சனை இருப்பதாக பகார் ஜமான் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் நீக்கம் சர்ச்சை

இந்த ஆண்டு இங்கிலாந்து பாகிஸ்தானில் விளையாடிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறி சமாளித்தது. அவர் நீக்கம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் அந்த நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரவின.

இப்படியான சூழ்நிலையில் தனது முன்னாள் கேப்டன் பாபர் அசாமுக்கு ஆதரவாக பேசி இருந்தார். அவரை நீக்குவது மிகவும் தவறான முடிவு என்றும், அப்படி சிந்திக்க கூடாது என்றும், விராட் கோலி எவ்வளவு பேட்டிங் ஃபார்ம் சுமாராக இருந்தாலும் கூட அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்திருப்பதற்கான காரணத்தை யோசிக்க வேண்டும் என்றும் அப்போது தெரிவித்திருந்தார். இதனால் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக அவர் பேசியதாக புரிந்து கொள்ளப்பட்டது. தற்போது அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

நான் வாரியத்திற்கு எதிராக பேசவில்லை

இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் பகார் ஜமான் கூறும் பொழுது ” பாபர் அசாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்குவதற்கு முன்பாகவே நான் பாபர் அசாமை நீக்க கூடாது என ட்வீட் செய்திருந்தேன். ஆனால் என்னுடைய கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை விமர்சித்ததாக தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. நான் அதற்கு இரண்டு மூன்று நாட்களாக பாபர் அசாம் மீது முன்னாள் வீரர்கள் செய்து வந்த விமர்சனத்திற்குதான் ட்வீட் செய்திருந்தேன்”

இதையும் படிங்க : கில் செஞ்ச அந்த மாற்றம் தான் பிரச்சனை.. ஆனா இத செஞ்சா மட்டுமே போதும் – ரிக்கி பாண்டிங் ஆதரவு

“நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர். இப்படி இருக்கும் பொழுது நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முடிவை விமர்சிக்க முடியாது. எதிர்காலத்தில் இளம் வீரர்களுக்கும் நான் இப்படி செய்யக்கூடாது என்றுதான் சொல்வேன். இந்த விஷயத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். நான் இன்னும் எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டியது இருக்கிறது. நிச்சயமாக நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை விமர்சிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -