நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது செமி பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிகள் நுழைய பும்ரா பந்துவீச்சு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பாராட்டி பேசி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டு அணி பந்துவீச்சாளர்களிலும் குறைந்த ரன்கள் கொடுத்த ஒரே வீரராக பும்ரா மட்டுமே இருந்தார். மேலும் இரண்டு அணிகளின் வித்தியாசமாகவும் அவரே இருந்தார். அவருடைய பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும்.
நேற்று இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடிய காரணத்தினால் இந்திய அணியில் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக கையை விட்டு சென்று கொண்டிருந்தது. இதனால் பும்ராவை இறுதிக்கட்ட ஓவர்களுக்கு பயன்படுத்தும் முடிவை கைவிட்டு, அவரை முன்கூட்டியே கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்து வீச்சுக்கு கொண்டு வந்தார்.
நேற்று 16 மற்றும் 18வது ஓவர்களை பும்ரா வீசினார். இந்த இரண்டு ஓவர்களிலும் சேர்த்து அவர் மொத்தமாக 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் காரணமாகவே இங்கிலாந்து கடைசி ஓவருக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இல்லையென்றால் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய எளிமையான இடத்தில் இருந்து போட்டியை வென்றிருக்கும்.
இதுகுறித்து பாப் டு பிளேசிஸ் கூறும்பொழுது ” பும்ரா போன்ற ஒருவர் இந்திய அணியில் இருப்பதற்கு அவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை அவர்களே முழுமையாக உணரவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர் கையில் பந்தை கொடுத்தால் அவர் வெற்றியை தேடி தந்து விடுவார் என்பது இன்னும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது”
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவுக்கும் சாம்சனுக்கும் இதுதான் வித்தியாசம்.. இத புரிஞ்சுக்கலைன்னா ரொம்ப கஷ்டம் – முகமது அமீர் விமர்சனம்
“எந்த ஒரு கேப்டனும் கனவு காணும் அபூர்வ சக்தி இதுதான். பும்ராவை வைத்திருப்பது ஒரு மாய விளக்கை வைத்திருப்பது போல. நீங்கள் அந்த விளக்கை தேய்த்தால் அதிலிருந்து ஜீ னி வெளிப்படுவது போல, பும்ரா வந்து உங்களுக்கு தேவையான காரியத்தை செய்து கொடுத்து விடுவார்” என்று பாராட்டி இருக்கிறார்.