பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் மீண்டும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பேட்டிங் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா மிகவும் சுமாரான முறையில் விளையாடுகிறார். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து மூன்று டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்திருக்கிறார்.
இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது ” இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களுக்கும் உலகக்கோப்பைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சாதாரண தொடர்களில் ஒரு அணி புதிய வீரர்களை பரிசோதித்துப் பார்க்கும். மற்ற அணி வீரர்களை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்”
“அதே சமயத்தில் உலகக் கோப்பை என்று வந்துவிட்டால் எதிரணிகள் ஒவ்வொரு வீரரையும் மிகவும் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். தற்போது இவர்கள் அபிஷேக் சர்மாவின் பலம் பலவீனத்தை கணித்துவிட்டார்கள். ஆப் ஸ்பின்னர் மற்றும் உடலுக்குள் பந்து வீசும் பொழுது அவர் தடுமாறுகிறார் என்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட டெக்னிக் ரீதியாகவும் மனரீதியாகவும் பலமாக இருக்க வேண்டும்”
சஞ்சு சாம்சன் பலம்
“சஞ்சு சாம்சன் ஏன் நன்றாக விளையாடுகிறான் என்றால், அவருடைய பேட்டிங் டெக்னிக், உள்நாட்டு கிரிக்கெட் விளையாடிய அனுபவம், மேலும் ஐபிஎல் விளையாடிய அனுபவம் என்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அவர் இதனால் அவர் மைதானத்தில் எல்லா பக்கத்திலும் விளையாட ஷாட் வைத்திருக்கிறார். தற்போது ஒரே பக்கமாக விளையாடக்கூடிய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் நிலைக்க முடியாது”
இதையும் படிங்க : நான் இந்த மாற்றங்களை செஞ்சுதான் ரன் அடிக்க ஆரம்பிச்சேன்.. இன்னொரு உண்மையையும் சொல்றேன் – சஞ்சு சாம்சன் தகவல்
” நீங்கள் ஜேக்கப் பெத்தேலை எடுத்துக் கொண்டால் வரும் சக்கரவர்த்தி ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் அடித்தார். ஆனால் மூன்றாவது சிக்ஸரை சுவிட்ச் ஹிட் மூலம் சிகிஸர் அடித்தார். மேக்ஸ்வெல் எல்லா பக்கத்திலும் அடிக்க மாட்டார். ஆனால் அவருக்கு ஒரே பக்கத்தில் விளையாட இரண்டு ஷாட் இருப்பதால் ரன் எடுக்க முடிகிறது. எனவே இப்போது நீங்கள் எல்லா பக்கத்திலும் விளையாடக்கூடிய 360 டிகிரி வீரராக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






