7ஆவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, இனியும் பிளே-ஆப் சுற்றுக்கு போகுமா? அதுக்கு என்னென்ன செய்ய வேண்டும்?

0
810

ஆர்சிபி அணி இனியும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதா? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை பின்வருமாறு காண்போம்.

இந்த வருட ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுடன் கடைசி இரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து பின்னடைவையும் சந்தித்தது ஆர்சிபி அணி. இதனால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர்களாகவே கடினம் ஆக்கிக் கொண்டனர்.

இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. அதில் முதலாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ், அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில் ஒரு போட்டி மட்டுமே ஆர்சிபி அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் சற்று கடினமான சூழலில் இருக்கிறது.

தற்போது 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி இனி பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

முதலில் தனக்கு மீதம் இருக்கும் மூன்று லீக் போட்டிகளையும் ஆர்சிபி அணி வென்றாக வேண்டும். அடுத்ததாக லக்னோ அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது. அதில் ஏதேனும் ஒரு அணியிடம் லக்னோ அணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

ஆர்சிபி அணிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது கடைசி இரண்டு லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில் ஏதேனும் ஒரு அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

இவை நடக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகள் இருக்கிறது.