“அகமதாபாத்தில் எல்லாம் மாறும்.. சாதனைகளே உடைக்கத்தான்.. இந்தியாவை தோற்கடிப்போம்!” – பாபர் அசாம் சிறப்பு பேட்டி!

0
1031
Babar

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடைபெற இருக்கிறது!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை இந்திய பாகிஸ்தான் அணிகள் மொத்தம் ஏழு முறை மோதி இருக்கின்றன. ஏழு முறையும் இந்திய அணியே வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த முறையும் இந்த சாதனை நீடிக்குமா? இல்லை டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தது போல், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் படைக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தற்பொழுது இரண்டு அணிகளுமே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தங்கி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணி பொதுவாக நம்பிக்கையுடனும் பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நம்பிக்கைவுடனும் இருக்கிறது.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பாபர் அசாம் பேசும் பொழுது “கடந்த காலத்தில் நடந்தவற்றில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. வரவிருப்பதில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். சாதனைகள் முறியடிக்கப்படுவதற்குதான் இருக்கிறது.நாங்கள் இதை முறியடிப்போம்.

- Advertisement -

நாளை நல்ல ஆட்டம். இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் பெரிய போட்டியில் அன்றைய நாளில் யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி. நாளை என் அணியின் வீரர்கள் முன்னேறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் தீவிரமான போட்டி. எங்களை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பு. நாங்கள் சிறப்பாக செய்து வருவதை தொடர்ந்து சிறப்பாக செய்வோம். அகமதாபாத் பெரிய மைதானம் எனவே நிறைய ரசிகர்கள் வருவார்கள்.

இந்த போட்டியில் என்ன நடக்கிறதோ அதை பொறுத்து எனக்கு கேப்டன் பதவி இருக்கும் இல்லை இருக்காது என்பது கிடையாது. ஒரு போட்டியால் எனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை. அதேபோல் ஒரு போட்டியால் என்னுடைய கேப்டன் பதவி போகப்போவதுமில்லை. நாங்கள் எங்களுடைய திட்டங்களை எளிமையாக வைத்திருக்க போகிறோம். அதை செயல்படுத்த போகிறோம்!” என்று கூறியிருக்கிறார்.