“எல்லாம் முடிந்தது.. செம்ம எனர்ஜில ரெடியா இருக்கேன்!” – ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எச்சரிக்கை!

0
295
Smith

தற்போது உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.

இன்று இந்த தொடரின் முதல் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் கே எல் ராகுல் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடி தொடரை இழந்து வந்திருக்கிறது.

மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் நால்வரும் காயத்தால் தென் ஆப்பிரிக்க தொடரை ஒட்டுமொத்தமாக இழந்தார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தங்களது விளையாடும் அணியை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு மேலாக காயத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களின் உடல் தகுதி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

இப்படியான காரணங்களால் ஆஸ்திரேலியா அணிக்கு இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய உடல் தகுதி குறித்து தற்பொழுது பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நான் கம்மின்சை சிறிது நேரம் வலையில் எதிர்கொண்டேன். அவருக்கு எதிராக நான் நன்றாக உணர்ந்தேன். சுழற் பந்துவீச்சு மற்றும் பல வகைகளை எதிர் கொண்டேன். எனவே இது ஒரு நல்ல தொடக்கம்.

நான் நிறைய ஓடினேன். ஆனால் என்னால் இதை எல்லாம் செய்ய முடிந்தது. நான் தற்பொழுது ஒரு சிறிய ஊசி போட்டுக் கொண்டேன். இப்போது நான் ஒரு மில்லியன் ரூபாயை பெற்றது போல சக்தியாக உணர்கிறேன்.

நான் ஆரம்பத்தில் ஊசி செலுத்திக் கொண்டதற்கு பிறகு, நான் நன்றாக உணர ஆரம்பித்தேன். நான் லேண்டிங் செய்து கொள்வதில் எச்சரிக்கையாக இருந்தேன். இப்பொழுது எல்லாம் எளிதாக இருக்கிறது. நான் தயாராகி விட்டேன்!” என்று கூறி இருக்கிறார்!