“ரோகித் சர்மாவை பத்தி எல்லாரும் திடீர்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனா..!” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பான பேச்சு!

0
5408
Rohit

உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆவலில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி வந்திருக்கிறது.

- Advertisement -

இறுதிப் போட்டியில் சந்திக்க இருக்கும் ஆஸ்திரேலியா அணியை, லீக் சுற்றில் தனது முதல் போட்டியில் இந்திய அணி அபாரமான முறையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் கூட எதிரில் இருப்பது ஆஸ்திரேலியா அணி என்கின்ற காரணத்தினால் போட்டிக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆஸ்திரேலியா அவ்வளவு சுலபத்தில் எந்த போட்டியையும் விட்டுத்தராது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது ” இந்த உலகக் கோப்பையை பற்றி பேசினால் ஒரு அழகான விஷயம் நடந்திருக்கிறது. ரோகித் சர்மா எவ்வளவு முக்கியமானவர் என்று எல்லோரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருவர் 40க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தால் அதை யாரும் பெரிதாக கொண்டாடாமல் இருந்தார்கள். அதே சமயத்தில் ரோகித் சர்மா 500 ரன்கள் மேல் எடுத்திருக்கிறார். மேலும் அவர் அந்த ரன்களை அடித்த விதம் அபாரமானது.

- Advertisement -

கேப்டன் முதலில் ஆட்டத்திற்கு தானே ஒரு தொனியை அமைக்கிறார். அவர் சிறப்பாக மேற்கொண்டு அணியை வழி நடத்துகிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சிறந்தவர்கள் எப்பொழுதும் முடிந்து போவது கிடையாது. ரோஹித் சர்மாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

ரோகித் சர்மாவுடன் கில் இருப்பார் அவருக்கு அகமதாபாத் ஆடுகளம் மிகவும் பிடிக்கும். அவர் எதன் மீதும் இல்லை வேறு யார் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. விராட் கோலி மூன்றாம் இடத்தில் வருகிறார் அவருடைய பணி முற்றிலும் வித்தியாசமானது.

அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர். அவர் இன்னும் ஒரு தவறு கூட செய்யாமல் இருந்து வருகிறார். அவருக்கு இன்று நிறைய பவுன்சர்கள் வீசுவார்கள். ஆனால் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்கு அடுத்து கேஎல்.ராகுல் ஸ்டெம்புக்கு முன்னாலும் பின்னாலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!