சராசரி 55 இருந்தும் சஞ்சுவுக்கு வாய்ப்பு இல்லை.. காரணம் இது மட்டும்தான்.. ஹர்பஜன் சிங் விளக்கம்.!

0
1117

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி மற்றும் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இவர் அணியில் இடம்பெறாதது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும் தேர்வு குழுவினரையும் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஆசிய கோப்பை காண அணி அறிவிக்கப்பட்ட போது இவரது பெயரிடம்பிறவில்லை. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத கேஎல் ராகுலுக்கு பேக் அப் வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். கேஎல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியதும் அணி நிர்வாகம் இவரை விடுவித்தது

- Advertisement -

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து சஞ்சு சாம்சனை நிராகரித்து வருவதாக முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர் . மேலும் இது தொடர்பான விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் உலக சாம்பியன் வீரரும் இந்திய அணியின் ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” ஒரு வீரர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 55.71 ரன்களை சராசரியாக வைத்திருந்தும் அவர் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது தற்போது மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இடம்பெறாதது விசித்திரமானதாகவே இருக்கிறது. ஆனால் அணியில் அவரை சேர்க்காததற்கு ஒரு காரணமும் உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” ஒரு அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம்பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று . இந்தியாவின் உலகக்கோப்பை அணியில் கேஎல் ராகுல் மற்றும் இஷாந்த் கிஷான் என்ற இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன் தனது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். இது ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமான ஒன்று . மேலும் மன வருத்தத்தையும் தரக்கூடியது. ஆனால் இவற்றையெல்லாம் அவர் கடந்து அதிகமான ரண்களை சேர்த்து மீண்டும் அணியில் இடம் பெற முயற்சிக்க வேண்டும். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

“என்னிடம் யாரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்வீர்கள் என்று கேட்டால் நான் கேஎல் ராகுல் பெயரை தான் சொல்வேன். ஏனென்றால் அவர் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இந்தியா அணிக்கு நிலையான பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார். சாம்சனும் நல்ல பிளேயர் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்திய அணியில் ஏற்கனவே இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சனையும் அணியில் எடுத்தால் மூன்று விக்கெட் கீப்பர்களுடன் எப்படி அணி விளையாட முடியும்”.? என்று கேள்வி எழுப்பினார் ஹர்பஜன்.

நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி மொகாலியில் வைத்து நடைபெற இருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கே எல் ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார். மேலும் இந்தியாவின் ஒரு நாள் போட்டிக்கான அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.