ஐசிசி அட்டவணை வெளியிட்டாலும் .. பாகிஸ்தான் உலக கோப்பையில் ஆடுவதில் சிக்கல்.. கிரிக்கெட் வாரியத்தின் பரபரப்பான அறிக்கை!

0
1584

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கி நடைபெற இருக்கிறது . பத்து அணிகள் பொங்குபுரம் இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது .

46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 45 லீக் போட்டிகள் இரண்டு அரை இறுதி மற்றும் ஒரு இறுதி போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் சென்னை மும்பை கொல்கத்தா டெல்லி பெங்களூர் ஹைதராபாத் புனே அகமதாபாத் லக்னோ தர்மசாலா உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன .

- Advertisement -

சமீப காலமாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் அரசியல் காரணங்களால் இருநாட்டு அணிகளும் சுற்றுப்பயணங்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களை தவிர்த்து வருகின்றன 2023 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல அரசு அனுமதி உறங்காது என்பதால் அந்த போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன .

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு போட்டிக்கான அட்டவணையை அனைத்து நாடுகளின் ஒப்புதலுக்கு அளிக்கும்போது மூன்று போட்டிகள் நடைபெறும் இடங்களை மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது . இந்தக் கோரிக்கையை ஐசிசி மற்றும் பிசிசிஐ நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

அக்டோபர் 15ஆம் தேதி இந்திய அணியுடன் அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடன் பெங்களூரில் வைத்து நடைபெறும் போட்டி மற்றும் 23ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் சென்னையில் வைத்து நடைபெறும் போட்டி ஆகிய மூன்று போட்டிகளின் இடங்களை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது . இந்தக் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

உலகக் கோப்பை காண அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் வாரியம் பரபரப்பான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது . அந்த அறிக்கையின்படி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய தங்கள் அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது . மேலும் போட்டி நடைபெறும் இடங்களை பற்றிய வழிகாட்டுதல்களையும் தங்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது .

இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ” எங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் அவர்களது வழிகாட்டுதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் . எங்கள் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவிப்போம் என்றும் கூறியிருக்கிறார் .

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அக்டோபர் ஆறாம் தேதி தனது முதல் போட்டியில் உலகக்கோப்பை தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் ஹைதராபாத்தில் மோத இருக்கிறது . தங்களது இரண்டாவது போட்டியை உலகக்கோப்பை தகுதி சுற்றில் இரண்டாம் இடம்பெருமணியுடன் அக்டோபர் 12ஆம் தேதி விளையாட உள்ளது . அதனைத் தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி இந்திய அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்ள இருக்கிறது . தங்களது நான்காவது போட்டியில் அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை பெங்களூரிலும் 23ஆம் தேதி ஆப்கானிஸ்தானை சென்னையிலும் வைத்து விளையாட உள்ளது . இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணியை சென்னையில் சந்திக்க இருக்கிறது .அக்டோபர்31 ஆம் தேதி கொல்கத்தாவில் பங்களாதேஷ் சனியுடன் விளையாட உள்ளது . தங்களது இறுதி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பெங்களூரில் வைத்து விளையாட இருக்கிறது