தன்னம்பிக்கைனா ஸ்டோக்ஸ்தான்.. ஆனா அவரே தோனி கேப்டன்ஷில விளையாட விரும்பினாரு – இயான் மோர்கன் பேச்சு

0
5099
Dhoni

இங்கிலாந்து அணி கிரிக்கெட் கண்டுபிடித்த நாடாக இருந்த போதிலும் கூட, உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டியதாக இருந்தது. முதன்முதலாக அந்த அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இ யான் மோர்கன் இருக்கிறார்.

இறுதியாக இயான் மோர்கன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி பின் ஓய்வு பெற்றார். தற்பொழுது அவர் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு, தன்னுடைய அனுபவத்திலிருந்து பல கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றியும் மகேந்திர சிங் தோனி பற்றியும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர்கள் பற்றி எடுத்துக் கொண்டால் முதன்மை இடத்தில் மொயின் அலிதான் வருவார். இதுவரையில் மூன்றாண்டுகள் விளையாடி இருக்கும் அவர் இரண்டு முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கிறார். மற்றபடி இங்கிலாந்து வீரர்கள் யாரும் சிஎஸ்கே அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக இல்லை.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மினி ஏலத்தில் 16 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார். ஆனால் கால் காயத்தால் அவர் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. இந்த ஆண்டு அவரை தொடர முடியாத நிலையில் சிஎஸ்கே வெளியே விட்டது. ஏற்கனவே அவர் புனே அணியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒரு ஆண்டு விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியில் விளையாட விரும்பும் வெளிநாட்டு வீரர்கள்

இயான் மோர்கன் சிஎஸ்கே அணியில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்கள் குறித்து பேசும் பொழுது “வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணிகள் இடம் பெற்று விளையாட மிகவும் விரும்புகிறார்கள். அந்த அணியில் இருக்கும் அற்புதமான குணாதிசயங்களை பற்றி பேசுகிறார்கள். நீங்கள் ஒரு அணியை சிறப்பாக வழி நடத்துவது குறித்து பேசும்பொழுது, அணியினர் ஒரு குறிப்பிட்ட நபரின் பேச்சை கேட்டுப் பின் தொடர்வார்களா? என்பதுதான் இருக்கும்.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் இதற்கு கேள்வியே கிடையாது. எல்லோருமே தோனியை பின் தொடர்வார்கள். அவர் எல்லா வீரர்களிடமும் அழிக்க முடியாத தன் முத்திரையை பதித்திருக்கிறார். சிஎஸ்கே அணியின் பெருமையை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தைரியமாக விளையாடும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ஒரு வீரரை ஒட்டுமொத்த அணியும் ஆதரிப்பதை அவர் எப்பொழுதும் உறுதி செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : களத்திலிருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர்.. அணிக்கு மேலும் பின்னடைவு.. ஐபிஎல் 2024ல் தொடரும் சோகம்

நம்ப முடியாத அளவுக்கு தன்னம்பிக்கை கொண்ட பென் ஸ்டோக்ஸ் மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடுவதை விரும்பினார். அவர் ஏற்கனவே துணை அணிக்காக தோனி உடன் இணைந்து ஓரிரு ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டார்கள். அவர் மஞ்சள் நிற ஜெர்சியை அணிவதை மிகவும் விரும்புகிறார்” என்று கூறி இருக்கிறார்.