களத்திலிருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர்.. அணிக்கு மேலும் பின்னடைவு.. ஐபிஎல் 2024ல் தொடரும் சோகம்

0
228
CSK

தற்போது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. கடந்த வருடம் மகேந்திர சிங் தோனி தலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசிப் பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு நான்கு நாட்களே இருக்கும் சூழலில், ஆரம்பத்திலேயே நியூசிலாந்தை சேர்ந்த சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர் கான்வே, பெரும்பாலும் காயத்தால் கிடைக்க மாட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அந்த அணிக்கு அமைந்திருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து சிஎஸ்கே அணிக்கு இறுதிக்கட்ட ஓவர்களில் குறிப்பிடும்படி செயல்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த இளம் வேதப்பந்துவீச்சாளர் மதிச பதிரனா, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் ஏற்பட்டு, தற்பொழுது சிஎஸ்கே அணிக்கு முதல் நான்கு போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

சிஎஸ்கே அணியின் பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் பவர் பிளேவில் பந்து வீசுவதற்கு தீபக் சகர், முகேஷ் சவுத்ரி, சர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே என நிறைய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு நம்பிக்கையான பந்துவீச்சாளர்களாக இல்லாமல் இருப்பது சிஎஸ்கே அணிக்கு ஒரு பிரச்சினையாக அமைந்திருக்கிறது.

சிஎஸ்கே அணிக்கு தொடரும் சோகம்

இதற்காகவே இலங்கையைச் சேர்ந்த மதீச பதிரனா, மேலும் இவருக்கு மாற்றாக பங்களாதேஷைச் சேர்ந்த அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோரை சிஎஸ்கே நம்பியிருந்தது. தற்பொழுது பதிரனா காயமடைந்திருந்தாலும், முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருப்பதால் சிஎஸ்கே நம்பிக்கையுடன் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS டெஸ்ட் தொடர்: மைதானங்கள் அறிவிப்பு.. மாஸ்டர் பிளான் போட்டிருக்கும் ஆஸி

இந்த நிலையில் உள்நாட்டில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, களத்தில் பில்டிங் செய்து கொண்டிருந்த முஸ்தஃபீசூர் ரஹ்மான் திடீரென உடல் முழுவதும் ஏற்பட்ட கிராம்ப் காரணமாக, மைதானத்தை விட்டு ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகப்படியான வெயில் நிலவுகின்ற காரணத்தினால், அவருக்கு இப்படி உடல் முழுவதுமான கிராம்ப் ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை அவரும் ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி கிடைக்காவிட்டால், கடைசிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கே அணி தடுமாற வேண்டி வரும். இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு காயம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது!