“எப்பா ஆள விடுங்க சாமி”.. தெறித்து ஓடிய பிசிசிஐ.. இனி டெஸ்டில் அது நடக்காது!

0
492
BCCI

தற்போதைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்திற்கு கொண்டு வருவது ஐசிசிக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. காரணம் கிரிக்கெட் மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் விளையாட்டாக இருக்கிறது. மாறிவரும் இயந்திரமய உலகத்தில், மனிதர்களால் இவ்வளவு நேரத்தை செலவழிக்க முடியவில்லை.

இதன் காரணமாக குறுகிய வடிவமான டி20 கிரிக்கெட் இயல்பாகவே கிரிக்கெட் பார்த்து பழகிய மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. எனவே தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டில் குறுகிய வடிவ கிரிக்கெட்டை பெரிய ஆதிக்கத்தை செலுத்துகிறது.

- Advertisement -

இதனால் பிசிசிஐ எப்படியாவது உண்மையான கிரிக்கெட்டான டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றி விட பல முயற்சிகளை செய்தது. முதல் முயற்சியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது.

எனவே எல்லா அணிகளும் முடிவை நோக்கி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. பழைய பாணியில் ரசிகர்களை சலிப்பாக்கும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட் இனி இருக்காது. இது ஓரளவுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.

இதற்கு அடுத்து இன்னும் ஒரு படி மேலே போய் ஐசிசி பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை பிங்க் நிற பந்தை வைத்து நடத்திப் பார்த்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது.

- Advertisement -

ஆனால் மிகப் பெரிய கிரிக்கெட் நாடான இந்தியா இதற்கு ஆரம்பத்திலிருந்து ஆதரவு காட்டவில்லை. மேலும் உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி விளையாடியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துமா? என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இடம் கேட்ட பொழுது “இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் ஆதரவு இல்லை. இதற்கு ரசிகர்களிடம் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். இந்த போட்டிகள் பெரும்பாலும் மூன்று நாட்களில் முடிந்து விடுகிறது. எனவே ரசிகர்கள் இதற்கு பழகிய பிறகுதான், பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் ஆதரவு தர முடியும்.

இறுதியாக ஆஸ்திரேலியா பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்தியது. பிறகு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி எதுவும் நடத்தப்படவில்லை.நாங்கள் அடுத்து இதுகுறித்து இங்கிலாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். படிப்படியாக நாங்கள் இதில் ஏதாவது செய்வோம்!” என்று கூறி இருக்கிறார்!