இந்திய அணி எங்கள பழிவாங்க நிச்சயம் வரும்.. ஆனா ரோகித் டீம் இத செய்யலனா முடியாது – டிராவிஸ் ஹெட் பேச்சு

0
423
Head

இந்திய கிரிக்கெட் அணிக்கு சமீப காலத்தில் ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா அணி பெரிய பிரச்சனைகளை கொடுக்கும் அணியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் அந்த அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இது குறித்து பேசி இருக்கிறார்.

இந்திய அணி கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு ஐசிசி தொடர்களை ஆஸ்திரேலியா அணியிடம் இழந்தது. முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்து இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர என இரண்டு உலகக் கோப்பை தொடர்களை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.

- Advertisement -

இந்த இரண்டு பெரிய போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்து இருந்தார். தனிப்பட்ட முறையில் அவருடைய ஆட்டம் இந்திய அணிக்கு இரண்டு பெரிய போட்டிகளிலும் பின்னடைவை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டதற்கு, அவர் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது ” இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடுவது மிகவும் நன்றாக இருக்கும். கடந்த முறை இரண்டு இறுதிப் போட்டியில் என்ன நடந்தது என்பதை கொண்டு பார்க்கும் பொழுது, இந்தியாவில் உள்ள அனைவரும் இதை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். இந்தியா ஒரு கட்டத்தில் எங்களை பழிவாங்க வேண்டும் என்று விரும்பும். நாங்கள் இருவருமே இறுதிப் போட்டிக்குள் இருந்தால் என்ன நடக்கிறது? என்று பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் பாத்தவங்க ஏமாற போறாங்க.. எங்க கிட்ட இதெல்லாம் எதிர்பாக்காதிங்க – ரோகித் சர்மா பேச்சு

ரோகித் சர்மா அதிகம் கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் கடந்த சில காலமாக ஒரு கேப்டனாகவும் வீரராகவும் விதிவிலக்கானவராக சிறப்பாக இருந்திருக்கிறார். அதனால் இந்திய அணியில் எந்த பிரச்சனைகளும் இல்லை. இந்திய அணி இப்போது நல்ல கைகளில் இருக்கிறது. ஆனால் அவர்கள் தாக்குதல் பாணி கிரிக்கெட் விளையாட வேண்டும் அதுதான் முக்கியம்” என்று கூறி இருக்கிறார்.