பாகிஸ்தான் வீரர்களுடன் டின்னருக்கு 25 டாலர்.. உங்களுக்கு இது வெட்கமா இல்ல – ரஷித் லத்தீப் விமர்சனம்

0
67
Latif

நடப்பு டி20 உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாபர் அசாம் தலைமையில் எதிர்கொள்கிறது. அந்த அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் படுதோல்விக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து தொடர்களுக்கு புதிய கேப்டன்களை நியமித்தது. இந்த நிலையில் அது சரியாகச் செல்லவில்லை.

- Advertisement -

எனவே மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாமை டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேப்டனாக கொண்டு வந்திருக்கிறது. அத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இத்துடன் பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்படி எல்லா வகையிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படுவதற்கு வேலைகளை தொடர்ந்து செய்து வந்தது. இந்த நிலையில் வீரர்களை ரசிகர்கள் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு டின்னருக்கு, சந்தித்த ரசிகர்களிடம் தலைக்கு 25 டாலர் வசூல் செய்யப்பட்ட ஒரு நிகழ்வு கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறும் பொழுது “அதிகாரப்பூர்வ டின்னர்கள் தனியாக இருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சி. இப்படிப்பட்ட ஒன்றை யாரால் செய்ய முடியும்? இது பயங்கரமானது. அதாவது நீங்கள் எங்களுடைய ரசிகர்களை 25 டாலர்கள் கொடுத்து சந்தித்தீர்கள். இதைப் புரிந்து கொள்வதில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருந்தால், பாகிஸ்தான் பணம் சம்பாதிப்பதற்காக இப்படி செய்தார்கள்” என்று மக்கள் பேசி இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணி எங்கள பழிவாங்க நிச்சயம் வரும்.. ஆனா ரோகித் டீம் இத செய்யலனா முடியாது – டிராவிஸ் ஹெட் பேச்சு

மேலும் பாகிஸ்தான் அணியை பற்றி பேசிய முன்னாள் வீரர் அகமது சேஷாத் “பாகிஸ்தான் அணியின் ஒழுக்கத்தைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால் காலை ஆகிவிடும். நான் எதுவும் சொல்லவில்லை. விளையாட்டு பற்றி மட்டுமே பேசுவோம். நீங்கள் பெரிய வீரர் என்று சொன்னால், உங்களைவிட யாரும் பெரியவர்கள் இல்லை என்று சொன்னால், உலகக் கோப்பையில் உங்களுக்கு ஐந்து போட்டிகள் கிடைத்திருக்கிறது, அதில் வெற்றி பெறுங்கள் “என்று கூறியிருக்கிறார்

- Advertisement -