“நானும் ஆண்டர்சனும்.. இந்த இந்திய வீரர் பற்றிதான் பேசிக்கிட்டே இருந்தோம்” – இங்கிலாந்து ராபின்சன் பேட்டி

0
106
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக இந்த முறை இரண்டு போட்டிகளுக்கும் கொடுக்கப்பட்ட ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு மிக அதிகம் ஒத்துழைப்பது போல் இல்லை.

- Advertisement -

இதன் காரணமாக போட்டிகள் நான்காவது நாளின் இறுதிக்கு எல்லாம் சென்று முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிந்து விடும். இதனால் டெஸ்ட் போட்டிக்கான உணர்வே இல்லாமல் ரசிகர்களுக்கு இருந்தது.

இந்த முறை பழைய பாணியில் ஒவ்வொரு நாளாக கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சு சாதகமாக மாறும் வகையில் ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டன. இதன் காரணமாக பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் ஆடுகளத்தில் சாதகங்கள் இருந்தன. இதனால் இரு அணிகளுக்கும் இடையே போட்டித் தன்மை அதிகமாக காணப்படுகிறது.

இந்த இடத்தில் தான் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா எதிர் முகாமை சேர்ந்தவர்களையும் ஆச்சரியப்படுத்தும் வீரராக மாறி இருக்கிறார். பந்துவீச்சில் ஒத்துழைக்காத ஆடுகளத்தில் அவர் காட்டியிருக்கும் மேஜிக் எல்லோரையும் ஈர்த்து இருக்கிறது. தொடர்ச்சியாக அவரைப்பற்றி நிறைய பேர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் கூறும் பொழுது ” அவர் போப்பை யார்க்கர் மூலம் அவுட் செய்யும் பொழுது, என்ன இந்தப் பையன் ஜோக் செய்கிறான் என நினைத்தேன். அடுத்து பென் ஃபோக்சை ஒரு மெதுவான பந்தின் மூலம் வெளியேற்றிய பொழுது, இவரைப்போன்று வர முடியுமா? என்று நினைத்தேன்.

முதலில் நீங்கள் பும்ராவை பார்க்கும் பொழுது அவர் அற்புதமானவர் என்று நினைக்கிறீர்கள். இதற்கு அடுத்து அவர் மேலும் ஏதாவது அதிசயங்கள் செய்ய மாட்டாரா? என்று எதிர்பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். விசாகப்பட்டினத்தில் இவர் தான் உலகில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என பத்து முறையாவது சொல்ல வைத்திருக்கும்.

இதையும் படிங்க : “உங்க கடமையை செய்யனும்னா.. மாத்தி இந்த பையன விளையாட வைங்க” – ஆகாஷ் சோப்ரா பேச்சு

நானும் ஆண்டர்சனும் அவரைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே இருந்தோம். இந்தியாவில் செயல் திறனை வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். ஒரு சிறந்த போட்டியை பார்த்தோம். அதற்கான பாராட்டு பும்ராவுக்குதான். அவர் இங்கு பந்து வீசும் விதத்தில் என்னுடைய சிந்தனைக்கு நிறைய தீனி போட்டு இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.