“உங்க கடமையை செய்யனும்னா.. மாத்தி இந்த பையன விளையாட வைங்க” – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
56
Akash

நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் துவங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருக்க மாட்டார்கள். இதேபோல் ரவீந்திர ஜடேஜா விளையாடுவாரா இல்லையா என்பது கடைசி நேரத்தில்தான் முடிவாகும்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் அனுபவம் அற்றதாக இருக்கும். ரோகித் சர்மாவுக்கு அடுத்து கில் மட்டுமே 20 டெஸ்ட் தாண்டிய பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இருக்கிறார்.

எனவே தற்போது இந்திய அணியில் சர்ப்ராஸ்கான் இல்லை தேவ்
தத் படிக்கல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது இருக்கிறது. இதில் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆகாஷ் சோபரா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “இருவரில் யார் விளையாட வேண்டும் என்பதற்கான மிக எளிமையான பதில் என்னவென்றால், சர்பராஸ் கானுக்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் அவர் நீண்ட நாட்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் குவித்து வந்தார். படிக்கல் அப்படி ரன்கள் அடிக்கவில்லை.

- Advertisement -

இந்த சீசனை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் படிக்கல் மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு இதுவே சரியான நேரம்.

ஆனால் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, சர்ப்ராஸ் கானை விட அவர் அணிக்குள் முன்னே வந்தார் என்பதற்குதான். எனவே அதையே பின்தொடர்ந்து சர்பராஸ் கானுக்கும் விளையாடும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டியது இவர்களுடைய கடமை.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா இவ்வளவு அனுபவம் இல்லாத பேட்டிங் வரிசையுடன் களம் இறங்கி இருக்காது. பேட்டிங் உங்களிடம் எடுத்துக் கொண்டால் ரோஹித் சர்மா 56 டெஸ்ட்கள் விளையாடியவராக இருக்கிறார். இதற்கு அடுத்து கில் 22 டெஸ்ட்கள் விளையாடியவராக இருக்கிறார்.

இதையும் படிங்க : பயிற்சியில் இந்திய அணிக்கு பந்து வீசிய ஸ்காட்லாந்து ஸ்பெஷல் பவுலர்.. யார் இந்த தாமஸ் ஜோன்ஸ்?

இவர்களுக்குப் பிறகு ஆறு போட்டிகள் விளையாடிய ஜெய்ஷ்வால், கடந்த போட்டியில் அறிமுகமாகிய ரஜத் பட்டிதார், அடுத்த போட்டியில் அறிமுகமாக இருக்கும் சர்ப்ராஸ் கான் இல்லை படிக்கல் போன்ற இவர்கள்தான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.