பாகிஸ்தான் டெஸ்ட்.. இங்கிலாந்து அதிரடி பிளேயிங் XI அறிவிப்பு.. ஸ்டோக்ஸ்க்கு தொடரும் சோகம்

0
279
Stokes

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அணி தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் முல்தான் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு முடிந்து போன வாய்ப்பு

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு முடிந்துவிட்டது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு மிகக் குறைந்த அளவிலான ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை கவலைப்படாமல் வெற்றியை நோக்கி அதிரடியாக வழக்கம் போல் விளையாடுவதை பற்றி யோசிக்கும். எனவே இந்தத் தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் கடந்த முறை இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்தது.

- Advertisement -

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரூல்ட் அவுட்

நாளை மறுநாள் முல்தான் மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் சரியாகாத காரணத்தினால் இங்கிலாந்து கேப்டன் பெண் ஸ்டோக்ஸ் ரூல்ட் அவுட் செய்யப்பட்டிருக்கிறார். எனவே துணை கேப்டன் உள்ளி போப் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்படுவார்.

மேலும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத துவக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி மீண்டும் வந்திருக்கிறார். மேலும் காயம் அடைந்திருக்கும் மார்க் வுட் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கும் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாட்கள் கழித்து சுழல் பந்துவீச்சாளர் ஜாக் லீச் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : 114 ரன்.. ருதுராஜ் கனவை கலைத்த அடுத்த அஸ்வின்.. மும்பை மாநில அணி சாம்பியன்.. 2024 இரானி கோப்பை

இங்கிலாந்து பிளேயிங் லெவன்

ஸாக் கிரவுலி
பென் டக்கெட்
ஒல்லி போப் (கே)
ஜோ ரூட்
ஹாரி புரூக்
ஜேமி ஸ்மித்
கிறிஸ் வோக்ஸ்
கஸ் அட்கின்சன்
பிரைடன் கார்ஸ் (அறிமுகம்)
ஜாக் லீச்
சோயப் பஷீர்

- Advertisement -