உத்தரப் பிரதேஷ் ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற 2024 இரானி கோப்பை சாம்பியன் பட்டத்தை ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்திய அணிக்கு எதிராக ரகானே தலைமையிலான மும்பை மாநில அணி கைப்பற்றியது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதலில் பதிவு செய்து. மும்பை மாநில அணிக்கு 256 பந்துகளில் சர்ப்ராஸ்கான் 222 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். மும்பை அணி 537 ரன்கள் எடுத்தது. ரெஸ்ட் ஆப் இந்தியா பந்து வீச்சில் முகேஷ் குமார் 5 விக்கெட் கைப்பற்றினார்.
அபிமன்யு ஈஸ்வரனின் ஹாட்ரிக் சதம்
இதைத் தொடர்ந்து விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்கள் குவித்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் மும்பை அணிக்கு எதிராக முன்னிலை பெற முடியாமல் 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியன் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மும்பை மாநில அணி நேற்று ஆறு விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஐந்தாவது நாளில் சீக்கிரத்தில் மீதி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிரடியாக இலக்கை துரத்துவதற்கு ருதுராஜ் அணிக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.
அடுத்த அஸ்வின் தனுஷ் கோட்டியன்
இந்த நிலையில் ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா திட்டத்தை இளம் ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியன் தனி ஆளாக சிதைத்து விட்டார். இன்று இறுதிவரை களத்தில் நின்று விளையாடிய அவர் ஆட்டம் இழக்காமல் 114 ரன்கள் குவித்தார். மும்பை அணி ஏட்டு விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இரு அணிகளும் போட்டியை தேநீர் இடைவேளையின் போது டிராவில் முடித்துக் கொண்டார்கள். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் சரண்ஸ் ஜெயின் 6 விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : சச்சின் விராட் ரோகித் இல்லை.. என்னை விட மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான் – ரிக்கி பாண்டிங் தேர்வு
மும்பை அணி முதல் இன்னிங்ஸ் இல் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை விட ரன் முன்னிலை பெற்று இருந்த காரணத்தினால் போட்டி டிராவில் முடிவடைந்தாலும் கூட, 2024 இரானி கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் இரானி கோப்பை ருதுராஜுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. மேலும் மும்பை மாநில வீரர் சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.