ஸ்டார்க் போல்ட்டை எதிர்கொள்ள இங்கிலாந்து மாஸ்டர் பிளான்.. இந்திய ஸ்பெஷலிஸ்ட் இணைப்பு.. தவறவிட்ட இந்தியா!

0
530
England

இந்தியாவில் நாளை மறுநாள் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், உலகக் கோப்பையை வெல்வதற்கான முன்னணியில் இருக்கக்கூடிய அணியாக இங்கிலாந்து அணி இருக்கிறது!

ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை இந்த உலகக்கோப்பைக்காகவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துக் கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவங்களில் நடப்பு சாம்பியன் ஆக இங்கிலாந்து அணியே இருந்து வருகிறது. அதிகப்படியான ஆல்ரவுண்டர்களைக் கொண்டு அதிரடியான அணுகுமுறையை இங்கிலாந்து அமைத்து வெற்றி பெற்று வருகிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பைக்கு முன்பாக உள்நாட்டில் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய பொழுது 9 விக்கெட்டுகளை டிரண்ட் போல்டுக்கு கொடுத்து இருந்தது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் பெகரண்டாப் மற்றும் ஸ்டார்க் இருவருக்கும் ஒன்பது விக்கெட்டுகள் கொடுத்தது. மேலும் அந்த உலகக் கோப்பையில் 20 விக்கெட்டுகளை இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இழந்திருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக அதிரடியாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இடதுகை சைடு ஆர்ம் த்ரோ இந்திய ஸ்பெஷலிஸ்ட், சவுரப் அம்பேத்கர் என்பவரை தங்கள் அணியுடன் இந்தியாவுடன் நடக்க இருந்த பயிற்சி போட்டியின் போது இணைத்துக் கொண்டிருக்கிறது.

இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை இங்கிலாந்து வகுத்திருக்கிறது.

அதே சமயத்தில் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் பெரிய தடுமாற்றத்தை கொண்டிருக்கும் வேளையில், இப்படியான ஒரு இடதுகை சைடு ஆர்ம் த்ரோ ஸ்பெஷலிஸ்ட்டை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தவறவிட்டதாகவே பார்க்கப்படுகிறது!