இந்திய அணியிடம் தோல்வி.. பீட்டர்சன் சர்ச்சையான விமர்சனம்.. பயிற்சிகளை பார்த்தீர்களா.? இங்கி ஜோரூட் தரமான பதிலடி..

0
713

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் கெவின் பீட்டர்சன் தனது விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் தற்போது விளையாடி வரும் ஜோ ரூட் கெவின் பீட்டர்சனின் விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து ஆஸ்திரேலியா முதல் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, வரிசையாக ஒரு நாள் தொடரில் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி அதற்குப் பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின்னர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமீபத்தில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் மூன்றிலும் தோல்வியடைந்து மோசமான சிக்கலில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணியினர் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை எனவும், வீரர்கள் அனைவரும் கோல்ப் விளையாட்டு விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் சர்ச்சையான விமர்சனம் ஒன்றை தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியில் தற்போது விளையாடி வரும் ஜோ ரூட் அவரது கருத்துக்கு சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

அவர்கள் வந்து பார்ப்பதில்லை

இதுகுறித்து ஜோ ரூட் கூறும் பொழுது “விமர்சனம் செய்யும் யாரும் நாங்கள் செய்யும் பயிற்சிகள் வந்து பார்ப்பதில்லை. நாங்கள் என்ன செய்கிறோம் எப்படி செயல்படுகிறோம் என்பது குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. எனவே இது போன்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. இந்த சூழ்நிலை வேறு ஏதாவது ஒன்றை செய்ய நிர்பந்திக்கிறது. தற்போது வருவது வழக்கமான சவால் இல்லை என்றாலும் இதனை நாம் கடந்து செல்ல முடியும். நாம் கடக்க வேண்டிய சவால்கள் வேறுபட்டவை.

இதையும் படிங்க:கோலியை அவுட் செய்ய.. பெயர் இந்த எழுத்திலும் அந்த வகை பவுலரா இருந்தா போதும் – ஆகாஷ் சோப்ரா வினோத கருத்து

ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில், வெற்றி பெறக்கூடிய சூழ்நிலைகளை கண்டுபிடித்து சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்களா? என்று கேட்டால் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று தான் கூறுவேன். மேலும் அதனை செய்யக்கூடிய சிறப்பான வீரர்கள் இங்கிலாந்து அணியில் இருக்கின்றனர். மேலும் எங்கள் அணியிடம் நிச்சயமாக நல்ல திறமை இருக்கிறது என்று தான் கூறுவேன்” என ஜோ ரூட் பேசி இருக்கிறார். இங்கிலாந்து அணி நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -