நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி அவுட் ஆன விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலி ஆட்டம் இழந்த விதம்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணியில் விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர் ரிசாத் ஹுசைன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடிய விராட் கோலி, லெக் ஸ்பின்னர் அடில் ரசீத்தின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். சமீபகாலமாக அவுட் சைடு திசையில் வீசப்படும் பந்தக்களுக்கு வெளியேறும் விராட் கோலி தற்போது லெக் ஸ்பின்னர் வீசும் பந்துகளுக்கு தடுமாறி வருகிறார். இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
லெக் ஸ்பின் பிரச்சனை
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது “விராட் கோலிக்கு இப்போது ஒரு புதிய சர்ச்சை ஆரம்பித்திருக்கிறது. பந்து வீசும் பந்து வீச்சாளர் பெயர் ரசீத் அல்லது ரிசாத் ஆக இருந்தால் மேலும் அவர் ஒரு லெக் ஸ்பின்னர் ஆக இருந்தால், விராட் கோலி ஆட்டம் இழந்து விடுகிறார். சில சமயம் முன்பாதத்தில் விளையாடச் சென்றும், சில சமயம் பின் பாதத்தில் விளையாட சென்றும் ஆட்டம் இழக்கிறார். இது ஒரு நல்ல கதை அல்லது நல்ல தோற்றம் நிச்சயமாக கிடையாது.
இதையும் படிங்க:கில் இல்லங்க.. இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்.. இப்படி ஒரு பெரிய காரணம் இருக்கு- அனில் கும்ப்ளே கருத்து
ஒரு லெக் ஸ்பின்னர் பந்து வீச வந்தவுடன் அவர் அவுட் ஆகி விடுகிறார்
நான் நேர்மையாக சொல்வேன், அவர் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது அவர் டாப் கியரில் இருந்ததாக தெரியவில்லை. இது ஒரு தடுமாற்றத்துடனே செயல்படுவது போல தெரிந்தது. அதேபோல அவர் கடந்த போட்டியில் அகமதாபாத்தில் அரை சதம் அடித்த போதும் அவர் டாப் கியரில் இருந்ததாக தெரியவில்லை” என்று அவரது பிரச்சனையை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.






