5வது டெஸ்ட்.. அணி தேர்வில் ரோகித் வைத்த டுவிஸ்ட்.. ஆடுகளம் குறித்து ஸ்பெஷல் நியூஸ்

0
184
Rohit

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடக்கிறது.

இந்தத் தொடரில் நடந்து முடிந்திருக்கின்ற நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டியை வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. முதல் போட்டியை வென்ற இங்கிலாந்து கடைசி போட்டியையும் வென்று நல்ல நினைவுகளுடன் நாடு திரும்ப முயற்சி செய்யும்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில்பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இங்கிலாந்து அணியின் தரப்பில் ஒன்லி ராபின்சன் இடத்தில் மார்க் வுட் விளையாடுகிறார்.

இந்திய அணியில் முக்கிய மாற்றமாக மூன்று வாய்ப்புகள் பெற்று சரியாக விளையாடாத ரஜத் பட்டிதார் நீக்கப்பட்டு, கர்நாடகாவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் இந்திய டெஸ்ட் அணியின் அறிமுக வாய்ப்பை பெற்றார்.

இந்திய அணியில் இன்னொரு மாற்றமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாட அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் நீக்கப்பட்டார். இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்களும் இன்றைய போட்டியில் செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ இருவரும் தங்களது சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால், இருதரப்பிலுமே போட்டி உணர்வுபூர்வமாக அமைந்திருக்கிறது.

டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “டாஸ் வென்று இருந்தால் நாங்களும் பேட்டிங் தேர்வு செய்திருப்போம். இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. மேலும் இங்கு இதுவரையில் கிடைக்காத நல்ல பவுன்ஸ் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த ஆடுகளம் பெரிதாக சேதமடையாது.

இதையும் படிங்க :அஸ்வினுக்கு நான் கோச்சா இருந்திருக்கேன்.. அவர் என்னென்ன செய்வார் தெரியுங்களா?” – ரிக்கி பாண்டிங் பாராட்டு

அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட். அவருக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமையான தருணம். நேற்று ரஜத் பட்டிதார் காயம் அடைந்ததால் தேவ்தத் படிக்கல் விளையாடுகிறார். ஆகாஷ் தீப் இடத்தில் திரும்ப வந்த பும்ரா விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.