“அஸ்வினுக்கு நான் கோச்சா இருந்திருக்கேன்.. அவர் என்னென்ன செய்வார் தெரியுங்களா?” – ரிக்கி பாண்டிங் பாராட்டு

0
237
Ashwin

நாளை துவங்க இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார்.

நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 500 ஆவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றி சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின், உள்நாட்டில் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர், அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனைகளை படைத்திருக்கிறார்.

- Advertisement -

நாளைய போட்டிக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்த கேள்விக்கு மிக நீண்ட நேரம் ஒதுக்கி தன்னுடைய பாராட்டையும் வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அவருக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பல தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள். வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சில நேரங்களில் வாய்ப்பு பெறாத காரணத்தினால், அவர் தன்னுடைய 37 ஆவது வயதில் நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடிய பொழுது, அவருக்கு தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் இருந்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்த்தை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “அஸ்வின் எல்லா கண்டிஷனிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சுழற்பந்து வீச்சின் மாஸ்டர். அவர் நம்ப முடியாத திறமை படைத்த அற்புதமான வீரர். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அவர் இருந்த பொழுது ஓரிரு ஆண்டுகள் அவருக்கு பயிற்சியாளராக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவருக்கு பந்துவீச்சில் தியரிகள் மற்றும் தத்துவம் எல்லாம் உண்டு. நான் விளையாட்டில் அதிகம் விரும்பியது இது. அவர்அவர் எப்பொழுதுமே விஷயங்களை வித்தியாசமாகச் செய்யக்கூடியவர். அவர் ஒரு பந்துவீச்சாளராக தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபட்டு மேம்பட்டு கொண்டே வந்தார். நான் அவருக்கு பயிற்சி அளிக்கும் போது விரும்பிய விஷயம் இதுதான்.

இதையும் படிங்க : BANvsSL.. களத்தில் மீண்டும் பிரச்சனை.. 8 விக்கெட்.. இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணி பதிலடி

மேலும் அவர் தனது பந்துவீச்சில் ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருப்பார். பந்தை வீசும் முறையில் ஏதாவது சிறிதான மாற்றத்தை செய்வார், இல்லையென்றால் பந்தை பிடிக்கும் முறையில் ஏதாவது மாற்றங்களை செய்வார். நல்ல வேலைக்கு செல்வதற்காக அவர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளால் ஒருபோதும் அவர் பின்தங்க மாட்டார்” என்று பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.