அனில் கும்ப்ளே இடத்தை நெருங்கும் ஸ்டுவர்ட் பிராட்… டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி ரெக்கார்ட் படைப்பு! – 600+ டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் லிஸ்ட்..

0
1418

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டி வரலாறு படைத்திருக்கிறார் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்.

தற்போது ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது.

- Advertisement -

நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு வழக்கம்போல வார்னர் மற்றும் கவாஜா இருவரும் ஓபனிங் இறங்கினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆவார். இதற்கு முன்பு மற்றொரு மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். ஆண்டர்சன் தற்போது 688 விக்கெட்டுகளில் இருக்கிறார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 600 டெஸ்ட் விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை கடந்த ஐந்தாவது வீரர் ஸ்டுவர்ட் பிராட் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் கடந்த வீரர்கள் லிஸ்ட்:

  1. முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகள்
  2. ஷேன் வார்னே – 708 விக்கெட்டுகள்
  3. ஜேம்ஸ் ஆண்டர்சன் – 688 விக்கெட்டுகள்
  4. அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்
  5. ஸ்டுவர்ட் பிராட் – 600* விக்கெட்டுகள்

மற்றுமொரு சாதனை:

நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்டில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாறு படைத்திருக்கிறார் ஸ்டுவர்ட் பிராட். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 148 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த லெஜெண்டரி ஆல்ரவுண்டர் போத்தம் முதலிடத்தில் இருந்தார். இவரது சாதனையை ஸ்டுவர்ட் பிராட் முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

  1. ஸ்டுவர்ட் பிராட் – 149* விக்கெட்டுகள்
  2. போத்தம் – 148 விக்கெட்டுகள்
  3. பாப் வில்ஸ் – 128 விக்கெட்டுகள்
  4. ஜேம்ஸ் ஆண்டர்சன் – 115 விக்கெட்டுகள்