தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மொத்தம் நான்கு அம்பயர்-கால் வந்திருக்கிறது. இந்திய அணிக்கு இந்த போட்டியில் பெரிய பின்னடைவாக இது அமைந்தது.
ஒருவேளை இந்த நான்கு முடிவுகளுக்கும் அம்பயர் அவுட் தராமல் இருந்திருந்தால், இங்கிலாந்து ரிவ்யூ சென்று இருந்தாலும், அவுட் கிடைத்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் பொழுது இந்திய அணி இது குறித்து எந்த விதமான அதிருப்தியும் வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி அம்பயர் கொடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு அதன் வழியிலேயே தொடர்ந்து விளையாடுகிறது.
ஆனால் இங்கிலாந்து அணி ஒவ்வொரு முறையும் அம்பயர்-கால் வரும் பொழுது, அல்லது டிஆர்எஸ் முடிவுகள் குறித்து ஏதாவது ஒரு குறையை சொல்லிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் பிரமாதமான பந்துவீச்சில் வீழ்த்தி இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து இருக்கிறார்.
இதில் மூன்றாவது விக்கெட்டாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஜோ ரூட் கிடைத்தார். நேராக விழுந்த பந்தை ஜோ ரூட் ஆடாமல் விட, இந்திய அணியினரின் முறையீட்டுக்கு அம்பயரும் அவுட் தரவில்லை.
இதனால் இந்திய அணியினர் ரிவ்யூ எடுக்க டி ஆர் எஸ் முறையில் பந்தின் பெரும் பகுதி ஸ்டெம்பில் பட்டதாக காட்டியது. இதனால் அம்பயர்-காலில் தப்பிக்கலாம் என்று இருந்த ஜோ ரூட் ஏமாற்றமடைந்தார்.
இதையும் படிங்க : 2 பந்து 2 விக்கெட்.. தினேஷ் கார்த்திக் பேச்சுக்கு அஸ்வின் பதிலடி.. கும்ப்ளே சாதனை முறியடிப்பு
ட்ரெஸ்ஸிங் ரூம் சென்ற ஜோ ரூட் தன்னுடைய அவுட் குறித்து பயிற்சியாளர் மற்றும் இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் தனது அதிருப்தியை பேசினார். இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும் அது அவுட் இல்லை என்பது போலவே வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்பொழுது இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது.