நியூசிக்கு எதிரான இங்கிலாந்து ODI அணி அறிவிப்பு.. ஸ்டோக்ஸ்க்கு இடம் .. நட்சத்திர வீரரை நீக்கி அதிரடி!

0
614
England

டி20 உலக சாம்பியனாகவும், ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியனாகவும், தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட் உலகத்தில் அசைக்க முடியாத அணியாக இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி இருந்து வருகிறது!

இந்தியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு, தங்களை மிக வலிமையாக தயார்படுத்திக் கொள்ளும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவுகளில் இறங்கி இருக்கிறது.

- Advertisement -

எனவே உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. டி20 தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 5ஆம் தேதி முடிகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் சில மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்காக அவரை மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்து வந்து, இந்த தொடரில் சேர்த்து இருக்கிறது.

அதே சமயத்தில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரரான ஹாரி புரூக்கை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. காரணம் நடுவரிசையில் வந்து பேட்டிங் செய்யும் அவர், இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பங்குபெற்று விளையாடும் பொழுது சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மிகவும் தடுமாறினார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் அவரை தேர்ந்தெடுத்தால் அவர் இங்கிலாந்து அணிக்கு நடுவரிசையில் வந்து சுழற்பந்துவீச்சாளர்களை சந்தித்து, இந்திய மண்ணில் விளையாடுவது மிக சிரமமாக இருக்கும். இதை மனதில் வைத்து அதிரடியாக அவரை நீக்கி இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். அதே சமயத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் இன்னும் குணமடையவில்லை. அவர் உலகக்கோப்பையின் பாதியில் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன்
ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோஷ் டங்க், ஜான் டர்னர், லூக் வுட்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கேப்டன்) மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.